வியாழன், 7 செப்டம்பர், 2017

​திட்டமிட்டபடி நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்: அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு..!! September 06, 201

​திட்டமிட்டபடி நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்: அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு..!!


திட்டமிட்டபடி நாளை மாநிலம் தழுவிய அளவில் வேலை நிறுத்தம் நடைபெறும் என்று ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும், 7வது ஊதிய குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஆகியோரை உள்ளடக்கி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

இது தொடர்பாக இந்த கூட்டமைப்பினர் தமிழக முதல்வருடன் இன்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. 

இதனையடுத்து திட்டமிட்டபடி நாளை முதல் மாநிலம் தழுவிய அளவில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அரசு ஊழியர்களின் சங்கங்களான ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 

மேலும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து வரும் 10ம் தேதி சென்னையில் அறிவிக்கப்படும் என்றும் அந்த கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

Related Posts: