புதன், 6 செப்டம்பர், 2017

தொல்லியல் துறை அதிகாரிகள் அளவு பணிகளை மேற்கொள்ள பொதுமக்கள் எதிர்ப்பு! September 06, 2017

தொல்லியல் துறை அதிகாரிகள் அளவு பணிகளை மேற்கொள்ள பொதுமக்கள் எதிர்ப்பு!


சென்னை ஜமீன் பல்லாவரம் பகுதியில், தொல்லியல் துறை அதிகாரிகள் அளவு பணிகளை மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்களை,  போலீசார் கைது செய்தனர்.

சென்னை ஜமீன் பல்லாவரம் பகுதியில் 57 ஏக்கர் நிலப்பரப்பு தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்த இடத்தில் புதிய கட்டுமானங்களை மேற்கொள்ள தொல்லியல் துறை தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து பாவேந்தர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், பாதுக்காக்கப்பட்ட பகுதி எது என்பதை தெளிவாக வரையறை செய்ய வேண்டுமென வலியுறுத்தியிருந்தார்.

இதையடுத்து பாதுகாக்கப்பட்ட பகுதியை, 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை அளந்து இறுதி செய்ய, தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, ஜமீன் பல்லாவரத்தில் தொல்லியல் துறை அதிகாரிகள் இன்று அளவை பணிகளை மேற்கொள்ள வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். இதனால் பதற்றமான சூழல் உருவான நிலையில், அங்கு அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர்.

பின்னர் அளவை பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அதன்பிறகு தொல்லியல் துறை அதிகாரிகள், போலீசாரின் பாதுகாப்புடன் அளவை பணிகளில் ஈடுபட்டனர். நாளையும், நாளை மறுநாளும் அளவை பணிகள் தொடர்ந்து நடைபெறவுள்ளன. முன்னெச்சரிக்கையாக அங்கு தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Posts: