இந்துத்துவ அரசியலுக்கு எதிராக தொடர்ந்து பேசிவந்த பெங்களூரை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
பெங்களூருவின் ராஜேஸ்வரி நகரில் இருக்கும் தனது வீட்டிற்கு காரில் வந்த இவரை, மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து பேசிய காவல்துறையினர், “ இன்று மாலை 6.30 மணிக்கு காரில் இருந்து இறங்கி வீட்டுக்கதவை திறக்கும் போது கௌரி லங்கேஷை மர்மநபர்கள் சுட்டுக்கொலை செய்துள்ளனர். கௌரி லங்கேஷின் நெஞ்சில் துப்பாகி குண்டுகள் துளைத்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்” என தெரிவித்தனர்.

பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் இந்துத்துவ அரசியலை தொடர்ந்து விமர்த்து வருபவர். பாஜகவினரை கடுமையாக விமர்சித்ததற்காக கடந்த ஆண்டு அவதூறு வழக்கில் தண்டனை பெற்றவர். இவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், “ஒரு இந்திய குடிமகளாக பாஜகவின் பாசிச மற்றும் இனவாத அரசியலை ஒருபோதும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்து அமைப்பில் உள்ள சாதிய அமைப்பை நான் தொடர்ந்து எதிர்ப்பேன். நம் அரசியல் அமைப்பு சட்டம் எனக்கு மதசார்ப்பின்மையைத்தான் கற்றுக்கொடுத்தது. எனவே மதவாதத்திற்கு எதிராக தொடர்ந்து குரல்கொடுப்பது என்னுடைய அடிப்படை உரிமையாகும்” என தெரிவித்திருந்தார்.

மதவாத அரசியலுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்த வந்த கல்புர்கியும் 2 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் தான் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்நிலையில், கௌரி லங்கேஷின் இந்த படுகொலை இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படுகொலை குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்துவருகின்றனர்.