புதன், 6 செப்டம்பர், 2017

போராட்டக் களமாகிறதா நினைவிடம்? September 06, 2017

போராட்டக் களமாகிறதா நினைவிடம்?


அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் மாணவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

பிளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண்கள் எடுத்தும் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காத மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். இதனால் தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் சமூக அமைப்புகள் போராட்டத்தில் குதித்தனர். 

குறிப்பாக, சென்னை லொயோலா கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து 2 நாட்களாக தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்து போராட்டத்தில் குதித்துள்ளனர். நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் புதுக்கல்லூரி மாணவர்களும் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

மேலும் இந்திய ஜனநாய மாணவ சங்கத்தினர் திடீரென மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். அதனால் அங்கு இருந்த போலீசார் மாணவர்களை அப்புறப்படுத்த முயற்சி செய்துவருகின்றனர். ஆனால் மாணவர்களோ மறைந்த முதல்வர் ஜெயலலிதா நீட் தேர்வு எதிராக இருந்ததாகவும் ஆனால் அவருடைய பெயரை சொல்லி ஆட்சி செய்ய்யும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நீட் தேர்வுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மெரினா பகுதியில் மாணவர்கள் கூடியதால் பெரும் பரபரப்பு நிலவிவருகிறது. 

நீட் தேர்விற்கு எதிரான மாணவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Posts: