வெள்ளி, 8 செப்டம்பர், 2017

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்! September 08, 2017

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்!


நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் நேற்றிரவு உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். 

அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு பிறகு தமிழகமெங்கும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் சூழலில், அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் நேற்று இரவு 10 மணி முதல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்திய அவர்கள், மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர். 

நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவது பல்வேறு கல்லூரிகளில் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Posts: