நீட் தேர்வுக்கு எதிராக புதிய இயக்கம் ஒன்றை தொடங்குவதற்கான அறிவிப்பை எம்.ஜி.ஆர் ஜெ.ஜெ திமுகவின் பொதுச்செயலாளர் மாதவன் அதிரடியாக வெளியிட்டுள்ளார்
நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன. இதற்கு ஒரு படி மேலாக, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு முழு விலக்கை வலியுறுத்த 'NEET -quit tamilnadu Movement' எனும் இயக்கத்தை தொடங்குவதாக எம்.ஜி.ஆர் ஜெ.ஜெ திமுகவின் பொதுச்செயலாளர் மாதவன் அதிரடியாக அறிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாகவே கட்சி பொறுப்பாளர் பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்யும் பணியில் விறுவிறுப்பாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார் மாதவன். இந்நிலையில், அனிதாவின் மரணத்தின் போதே மத்திய- மாநில அரசுகளுக்கு எதிராகவும், நீட் தேர்வு ரத்து செய்யக்கோரியும் வலியுறுத்தி அறிவிப்பு வெளியிட்டிருந்தா. இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக அதிரடியாக புதிய இயக்கத்தை தொடங்கும் மாதவனின் முடிவு தமிழக அரசியலில் புதிய பரபரப்பை உருவாக்கியுள்ளது