திங்கள், 1 ஏப்ரல், 2019

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு...! April 01, 2019

Image
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை, வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
மத்திய நேரடி வரி வாரியம், ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க, முதலில் 2018 ஜூலை மாதம் வரை அவகாசம் அளித்தது. பின்னர் அதற்கான காலக்கெடு இந்தாண்டு மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய நேரடி வரி வாரியம் இன்று வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு, வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது. மேலும், வருமான வரி பிடித்தத்தை திரும்பப் பெறவும் ஆதார் - பார் கார்டு இணைப்பு அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

source ns7.tv