தனுஷ்கோடியை மக்கள் வாழத் தகுதியற்ற இடமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
பழைய தனுஷ்கோடி, தாவுக்காடு, பாரடி உள்ளிட்ட கிராமங்களிலும் அங்குள்ள பள்ளிகளிலும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தக்கோரி ராமேஸ்வரம் உப்பூரைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜராகிய அதிகாரிகள் பழமையான வரலாற்று சிறப்பு மிக்க தனுஷ் கோடி தற்போது வாழ்வதற்கு தகுதியற்ற இடமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், மீனவர்கள் தொழில் நிமித்தமாக மட்டுமே தற்காலிகமாக தங்கியுள்ளனர் என்றும் தெரிவித்தனர்.
மேலும் அங்கு பழைய தபால் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்டவை நினைவு சின்னமாக மட்டுமே உள்ளன என்றும் கடல்சீற்ற காலங்களில் இங்கு வசிப்பது ஆபத்தானது என்றும் இதனால் அந்த பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாமல் உள்ளோம் எனவும் விளக்கமளித்தனர்.
இதனை கேட்ட நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு வருகிற 17ம் தேதி தனுஷ்கோடியில் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தனர். அதன்பின் இந்த மனு மீது அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி மனு மீதான விசாரணையை 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.