வியாழன், 14 செப்டம்பர், 2017

இங்கிலாந்தில் தாவுத் இப்ராஹிமின் சொத்துகள் முடக்கம்..! September 13, 2017

​இங்கிலாந்தில் தாவுத் இப்ராஹிமின் சொத்துகள் முடக்கம்..!


இந்தியாவைச் சேர்ந்த நிழல் உலக தாதா தாவுத் இப்ராஹிமின் சொத்துக்களை இங்கிலாந்து அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.

பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்துகொண்டு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் தாவுத் இப்ராஹிம், மும்பையில் கடந்த 1993 ஆம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவர் ஆவார். இவரை தேடப்பட்டு வரும் சர்வதேச குற்றவாளியாக இண்டர்போல் அறிவித்துள்ளது.

பணக்கார தாதா:

சர்வதேச நிழல் உலக தாதாக்களின் மிகவும் பணக்கார தாதாக்களில் ஒருவராக தாவுத் இப்ராஹிமை ஃபோர்ப்ஸ் இதழ் பட்டியலிட்டுள்ளது. இவரின் சொத்து மதிப்பு 6.7 பில்லியன் டாலர்கள் ஆகும். (இந்திய மதிப்பில் சுமார் 41,500 கோடி ருபாய்)

ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தெற்காசியா உள்ளிட்ட பகுதிகளில் 12க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது தொழில் சாம்ராஜ்யத்தை நடத்திவரும் தாவுத், பல நாடுகளில் 50க்கும் மேற்பட்ட சொத்துகளை வாங்கி குவித்துள்ளார். 

இங்கிலாந்தில் மட்டுமே 450 மில்லியன் டாலர்கள் ( இந்திய மதிப்பில் 2700 கோடி ரூபாய்) மதிப்பிற்கு அவருக்கு சொத்துகள் உள்ள நிலையில் தற்போது அவரின் சொத்துக்களை இங்கிலாந்து அரசு முடக்கியுள்ளது.

பிரதமர் மோடி அளித்த கோப்புகள்: 

கடந்த 2015ஆம் ஆண்டு 3 நாள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அப்போதைய பிரதமர் டேவிட் கேமரூனிடம் தாவுத் இப்பிராஹிம் குறித்த கோப்புகளை அளித்ததன் காரணமாகவே இந்த நடவடிக்கையை தற்போது இங்கிலாந்து அரசு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts: