ஆர்.கே.நகரில் வரும் டிசம்பர் 31ந்தேதிக்குள் இடைத் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவையடுத்து சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த ஏப்ரல் 12தேதி இடைத் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் பண விநியோகம் செய்ததாக எழுந்த புகாரையடுத்து ஏப்ரல் 9ந்தேதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதியிடம், ஆர்.கே.நகர் தேர்தல் தேதி குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது, டிசம்பர் 31ந் தேதிக்குள் ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். அதற்கேற்ப தேர்தலை நடத்த திட்டமிடப்படும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி தெரிவித்தார்.