வெள்ளி, 13 அக்டோபர், 2017

சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் ராகுல்காந்தியின் நடவடிக்கை October 13, 2017

சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் ராகுல்காந்தியின் நடவடிக்கை


காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி தவறுதலாக பெண்கள் கழிவறைக்குள் நுழைந்த சம்பவம் தொடர்பான போட்டோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

குஜராத்தில் சட்டசபை தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு ராகுல்காந்தி தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிறகு கழிவறைக்கு சென்ற ராகுல், தவறுதலாக பெண்கள் பகுதிக்குள் சென்றுள்ளார். 

கழிவறைக்கு வெளியே குஜராத்தி மொழியில் பெண்கள் கழிவறை என படத்துடன் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருந்து, அதனை கவனிக்காமல் ராகுல்காந்தி பெண்கள் கழிவறைக்குள் சென்றதை கண்டு எஸ்பிஜி கமாண்டோக்கள் வேகமாக ஓடிச்சென்று விவரம் தெரிவித்தனர்.

உடனடியாக தவறை புரிந்து கொண்ட ராகுல்காந்தி, சில நொடிகளிலேயே வேகமாக வெளியே வந்துள்ளார். இந்தப் புகைப்படம் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் உடனடியாக வெளியிடப்பட்டு வைரலாக பரவி வருகிறது.

Related Posts: