பூமியில் வாழும் உயிர்களுக்கு உயிர் மூச்சைக் கொடுக்கும் மரங்களுக்கே உயிர் மூச்சளிக்கிறார் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பையா என்ற முதியவர்... தள்ளாடும் வயதில், தலையில் மரக்கன்றுகளை சுமந்து ஊர் ஊராக அலைந்து திரிந்து மரங்கள் நடுவதை சேவையாக செய்யும் கருப்பையாவின் தொண்டிற்கு நியூஸ் 7 தமிழ் தலை வணங்குகிறது.
மரக்கன்றுகளே மகுடம்... மரம் வளர்ப்பதே லட்சியம்... தள்ளாடும் வயதில் மண்ணைக் கொத்தி மரம் நடும் இவர் அரியலூர் மாவட்டம் கள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் கருப்பையா... 85 வயதாகும் முதியவர் கருப்பையா மரம் நடுவதையே லட்சியமாகக் கொண்டு, பெரம்பலூர், அரியலூர், மதுரை, சேலம், தருமபுரி, நெல்லை, தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய 20க்கும் மேற்பட்ட ஆட்சியர் அலுவலகங்களில்,மரக்கன்றுகளை நட்டுள்ளார். அத்துடன், இவரின் கடின உழைப்பால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் என ஏராளமான இடங்கள் பசுமைப் பூத்து காணப்படுகிறது. கடந்த 40 ஆண்டுகளாக, மரம் நடுவதை குறிக்கோளாகக் கொண்டு, இதுவரை சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை வளர்த்து நாட்டுக்கு சேவை செய்துள்ளார் முதியவர் கருப்பையா.
முதியவர் கருப்பையாவின் இந்த சமூக சேவைக்கு அவரது குடும்பம் தடை போடாமல் பக்க பலமாகவே இருந்து வருவதாக பெருமிதம் தெரிவிக்கிறார். குடும்பம் பற்றிய கவலையின்றி, சமூகம் பற்றிய அக்கறையோடு மரக்கன்றுகளை நட்டு, பூமிக்கு புது சுவாசத்தைக் கொடுக்க தவமாய் மரக்கன்று நடும் முதியவர் கருப்பையாவின் சேவையால் பெருமைப்படுவதாக அவரது கிராம மக்கள் கூறுகின்றார். கருப்பையாவின் இந்த சேவை அந்த கிராம மக்களுக்கே முன்மாதிரியாக அமைந்துள்ளதாகவும் அவர்கள் பெருமிதம் தெரிவிக்கின்றனர்.
மரக்கன்றுகளை வாங்க பெரும் தொகையை செலவழிக்கும் கருப்பையா போன்றவர்களுக்கு மரக்கன்றுகளை வனத்துறையினர் இலவசமாக வழங்கினால், தொய்வின்றி அவர்களின் சேவை நடைபெறும் என்று கூறுகின்றனர் பொதுமக்கள்.
இயற்கையை காப்பதே மனித சமூகத்தைக் காப்பதாகும் என்ற லட்சியத்தோடு எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி கடந்த 40 ஆண்டுகளாக மரம் நட்டு வரும் முதியவர் கருப்பையா அனைவருக்குமே முன் உதாரணமாக திகழ்கிறார். இவரைப் போல், மரம் நடுவதில் அனைவரும், ஆர்வம் காட்டினால், வறண்டு காணப்படும் இந்த பூமி, பசுமையின் மடியில், புதிய பாதையை அமைத்து பயணிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.