
ஆந்திர மாநிலம் அம்மாபள்ளி அணைக்கட்டில் இருந்து உபரி நீர் திறக்கப்படுவதால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், கொசஸ்தலை ஆற்றில், ஆற்காடு குப்பம் பகுதியில் தரை பாலத்தை கடந்து வெள்ள நீர் செல்லுகிறது. இந்த ஆபத்தை உணராமல் பள்ளி மாணவர்கள் ஆற்றில் குளித்தும், கிராம மக்கள் மீன்பிடித்தும் வருவகின்றனர். எனவே, வெள்ளத்தில் யாரும் சிக்கிக் கொள்ளாதவாறு அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மழைகாரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி உள்ளிட்ட நான்கு நீர் தேக்கங்களிலும் தொடர்மழை காரணமாக, தற்போது 903 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாகவும் கிருஷ்ணாபுரம், அம்மாபள்ளி அணைகட்டில் இருந்து கடந்த சில தினங்களாக திறக்கப்பட்டு வந்த உபரி நீர் வரத்து அதிகரித்துள்ளதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் தேக்கமான பூண்டிக்கான நீர்வரத்து உயர்ந்து வருகிறது.