புதுக்கோட்டை நகரில் இருந்து 18 கி.மீ தொலைவில் உள்ளது வயலோகம். அன்னவாசல் ஒன்றியத்துக்கு உட்பட்ட இச்சிற்றூரில் ஏழு ஏக்கர் பரப்பளவில், பதிமூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவன் கோயில் உள்ளது. கைவிடப்பட்ட நிலையில், புதர்கள் மண்டி சிதைந்துப் போனக் கோயிலை மீட்டெடுத்து சீரமைக்கும் பணியில் தன்னார்வளர்களும் கிராம மக்களும் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து, ஓய்வுப் பெற்றத் தொல்லியல்துறை அதிகாரி திரு. ஸ்தபதி ராமன் அவர்களிடம் கேட்டபோது...
'' முதலாம் சுந்தரபாண்டியன் காலத்தில் கட்டப்பட்டது, இக்கோயில். மூலவர் சிவன். ஏழு ஏக்கரில், எதிரே குளத்துடன் அமைத்திருக்கும் இக்கோயில் முக்கிய தலங்களுள் ஒன்றாக இருந்திருக்க வேண்டும்.
ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக போதுமான பராமரிப்பின்றி இந்நிலையில் உள்ளது.
போதுமான தகவல்கள் கல்வெட்டுகள் ஆராய்ந்தால் கிடைக்கலாம்." என தெரிவித்தார்.
போதுமான தகவல்கள் கல்வெட்டுகள் ஆராய்ந்தால் கிடைக்கலாம்." என தெரிவித்தார்.
29.09.17 தொடங்கி இன்று (1.10.17) வரை நடக்கவிருக்கும் மீட்டெடுப்பு பணியில் சென்னை, கோவை போன்ற இடங்களில் இருந்தும் தன்னார்வலர்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.
செய்தி/படங்கள்: சே.அபினேஷ் (மாணவர் பத்திரிகையாளர்)
நன்றி : Vikatan EMagazine