'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பதே மத்திய அரசின் இலக்கு என்று மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசம் அலகாபாத்தில் பேசிய அவர், நாடு முழுவதும் ஒரே தேர்தல் என்பது குறித்த விவாதங்கள் அதிகரித்து வருவது வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ளார்.
சீர் திருத்தம், செயல்பாடு, மாற்றம் ஆகியவற்றிற்கான அரசாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு விளங்கி வருவதாக முக்தர் அப்பாஸ் நக்வி குறிப்பிட்டார். அடிக்கடி தேர்தல்கள் வருவதை மக்களும் சுமையாக கருதுவதாகவும், அதை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம் என்றும் நக்வி தெரிவித்தார்.
விவசாயிகள், இளைஞர்கள், ஏழைகள், கிராமங்களின் முன்னேற்றத்தை இலக்காகக் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருவதாகவும், மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் வளர்ச்சி குறித்த சிந்தனையை இனி தடுத்து நிறுத்த முடியாது என்றும் அவர் கூறினார்.