புதன், 4 அக்டோபர், 2017

வடமாநிலங்களில் அரங்கேறிவந்த அவலம் தற்போது தமிழகத்திலும்..! October 04, 2017



உயிரிழந்த பெண்ணின் உடலை எடுத்துச் செல்ல stretcher வழங்காததால், கணவரும், மகனுமாக சடலத்தைத் தூக்கிச் சென்ற அவலம் தமிழகத்தில் அரங்கேறி இருக்கிறது. 

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த அயன் புதுபட்டியை சேர்ந்த மதியழகன் என்பவரின் மனைவி சின்னபொண்ணு காய்ச்சல் காரணமாக கடந்த 10 தினங்களுக்கு முன்பு மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  

அவருக்கு டெங்கு காய்ச்சல் இருந்ததா என்பது தெரியாத நிலையில், நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மதியம் 1 மணியளவில் உயிரிழந்த போதிலும், மாலை 6 மணி வரை அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல அமரர் ஊர்தி வழங்கப்படவில்லை. 

இதேபோல் சடலத்தை தூக்கிச் செல்ல stretcher-ம் வழங்கப்படவில்லை. இதனால், சின்னபொண்ணுவின் கணவரும், மகனும் சேர்ந்து உடலை தூக்கிக் கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியே வந்தனர். 

அவர்களுக்கு யாரும் உதவி செய்யக்கூட முன்வரவில்லை. உடலை தூக்கிக்கொண்டு வெளியே வந்த போது தான் அமரர் ஊர்தி வந்தது. அதன் பிறகே, உடல் சொந்த ஊர் கொண்டு செல்லப்பட்டது. 

வட மாநிலங்களில், stretcher மற்றும் ஆம்புலன்ஸ் கிடைக்காமல், இறந்தவர்களின் உடல்களை, பலர் தூக்கிச் செல்லும் சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்திலும் அதே போன்றதொரு மனிதநேயமற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts: