மக்களை அலற வைத்திருக்கும் டெங்கு காய்ச்சலுக்கு சுகாதார ஊழியர்கள் பற்றாக்குறை மற்றும் பல்வேறு துறைகளின் ஒருங்கிணைந்த தடுப்புப் பணி இல்லாததே காரணம் என்று சுகாதார வல்லுநர்கள் அதிர்ச்சி தகவலை தெரவித்துள்ளனர்.
டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டாத காரணத்தால், 31 மாவட்டங்களிலும் டெங்கு காய்ச்சல் பரவலாகக் காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் சுகாதார ஆய்வாளர் மற்றும் ஆய்வக பணியாளர்கள் பற்றாக்குறையே காரணம் என்று தெரியவந்துள்ளது. 8,700 சுகாதார ஆய்வாளர்களில், 1,200 பேரே உள்ளனர். 1,250 ஆய்வக உதவியாளர்களில் 600 பேரே பணியில் இருக்கின்றனர்.
சுகாதாரம், உள்ளாட்சி, வருவாய் உள்ளிட்ட துறைகள் ஒருங்கிணைந்து செயல்படாததும் டெங்கு காய்ச்சல் கடுமையாக பரவக் காரணமாக அமைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் டெங்கு கொசு ஒழிப்பு, தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று சுகாதார வல்லுநர்கள் வலியுறுத்தி உள்ளனர்.