முகப்பு > தமிழகம்
கிணற்றைக் காணவில்லை என புகார்!
October 05, 2017

திருவள்ளூர் அருகே ஆழ்துளை கிணற்றை காணவில்லை என கிராம மக்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே நத்தம் ஊராட்சியில் கிராமமக்களின் குடிநீர் தேவைக்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது.
இதனிடையே, அங்கு பொருத்தப்பட்டிருந்த பைப் மற்றும் மின் மோட்டார்களை அகற்றிவிட்டு தற்போது வெறும் பள்ளம் மட்டுமே உள்ளது. எனவே அப்பகுதி மக்கள் ஆழ்துளை கிணற்றை காணவில்லை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கிணற்றைக் காணவில்லை என்கிற வடிவேலுவின் நகைச்சுவையை மட்டுமே பார்த்து சிரித்து வந்த நிலையில், உண்மையிலேயே ஒரு கிராம மக்கள் புகார் அளித்திருப்பது இத்தகைய நிலைமை கிராமங்களில் இருக்கிறது என்கிற வேதனையான உண்மையாகியுள்ளது.