புதன், 11 அக்டோபர், 2017

மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..! October 10, 2017

மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!


டெங்குவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்க கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொது நல மனு தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் தினமும் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு 10 பேர் உயிரிழந்து வருவதாகவும், 25 ஆயிரம் பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு எவ்வித நிவாரணமும் வழங்கவில்லை என்றும், உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரியிருந்தார். 

இந்த மனு, நீதிபதிகள் வேணுகோபால் மற்றும் அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக அக்டோபர் 24ம் தேதி மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர். 

Related Posts: