புதன், 11 அக்டோபர், 2017

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு கண்டனம் தெரிவித்த எழுத்தாளர் சேட்டன் பகத்! October 10, 2017

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு கண்டனம் தெரிவித்த எழுத்தாளர் சேட்டன் பகத்!


டெல்லியில் பட்டாசு விற்பனைக்குத் தடை விதித்து ஆணை பிறப்பித்து உச்சநீதிமன்றத்தின் உத்தரவிற்கு கண்டனம் தெரிவித்து ஆங்கில நாவல் எழுத்தாளர் சேட்டன் பகத் கண்டனம் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு ஏற்படுவதாகவும் அதனால் சுற்றுசூழல் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் கூறி பட்டாசு விற்பனையை தடை செய்ய வலியுறுத்தி கடந்த ஆண்டு 6 வயது சிறுவர்கள் மூன்று பேர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் டெல்லியில் பட்டாசு விற்க கூடாது என உத்தரவு பிறப்பித்ததனர். இந்நிலையில் தீபாவளி பண்டிகை வருவதால், பட்டாசு விற்பனைக்கு தடை இருப்பதால், வியாபாரம் கடுமையாக பாதிப்பதாகவும், பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தியும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். 

இதனை விசாரித்த நீதிபதிகள் பட்டாசு விறபனைக்கு விதிக்கப்பட்டு இருந்த தடையை 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் 1ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தனர். இந்த உத்தரவு குறித்து கருத்து தெரிவித்த சேட்டன் பகத், இந்து பண்டிகைக்கு மட்டும் தான் இந்த தடையா?, மொஹாராம், பக்ரீத் போன்ற பண்டிகைகளுக்கு ஆடுகள் வெட்டப்படுவதை நீங்கள் தடுக்க முடியுமா, கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது கிறிஸ்மஸ் மரம் என்ற பெயரில் மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பட்டாசு இல்லாமல் குழந்தைகள் எப்படி தீபாவளி கொண்டாடுவார்கள் என்றும், ஆண்டில் ஒரு நாள் மட்டும் பட்டாசு வெடிப்பதால், சுற்றுசூழல் பெரிதாக பாதிக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளார். 

இவருடைய இந்த கருத்திற்கு, அரசியல் தலைவர்கள் உட்பட பலர் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். குறிப்பாக சசி தரூர், அரசியல் பிரபலங்கள் மற்றும் பலர் சேட்டன் பகத்தை கடுமையாக விமர்சித்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு அடுத்தநாள் புகை மூட்டத்தால் டெல்லியில் பெரிய பெரிய கட்டடங்கள் கூட பார்ப்பவர்களின் கண்ணிற்கு தெரியாமல் இருந்தது. மேலும் புகை மூட்டத்தால் வயதானவர்களுக்கும் சிறுவர்களுக்கும் மூச்சு திணறல் போன்ற பிரச்சனைகள் வருவதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts: