சனி, 13 பிப்ரவரி, 2021

இந்தியர்களுக்கு எச்1பி விசாக்கள் வழங்குவதை நிறுத்துங்கள் – பைடன் நிர்வாகத்திற்கு கோரிக்கை

 Biden admin urged not to issue H-1B to Indians till country cap on Green Card is removed : குடியுரிமை (Green Card) பெறுவதற்கு தற்போது நடைமுறையில் இருக்கும் சில விதிகள் விலக்கு பெறும் வரை, இந்திய அமெரிக்கர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் குழு ஒன்று வியாழக்கிழமை அன்று இந்தியர்களுக்கு எச்1பி விசாவை சிறிது காலம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்று பைடன் நிர்வாகத்திற்கு ஆலோசனை கூறியுள்ளது.

தற்போது நடைமுறையில் இருக்கும் நிரந்தர குடியுரிமை வழங்குவதற்கான விதிமுறைகள் ஆயிரகணக்கான நபர்களை வருடக்கணக்காக காத்திருக்க வைத்துள்ளது. இந்தியாவில் இருந்து குறிப்பாக தகவல் தொழில்நுட்ப துறையை சார்ந்தவகளுக்கு குடியுரிமை வழங்குவதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. புதிதாக எச்1பி விசா வழங்குவது க்ரீன் கார்ட்கள் பெறுவதை மேலும் நீட்டிக்கும் என்று இமிக்ரேசன் வாய்ஸ் கூறியுள்ளது.

எச் -1 பி விசா வைத்திருப்பவர்களின் முதலாளிகள் இந்த ஆண்டு மார்ச் 9 ஆம் தேதி தொடங்கி 2022ஆம் நிதியாண்டில் எச்1பி விசா லாட்டரிக்கு ஆன்லைனில் பதிவு செய்ய அனுமதித்தது பைடன் நிர்வாகம். இதற்கு பதிலளிக்கும் வகையில் இந்த அறிக்கை வந்துள்ளது. இந்த அமைப்பின் மூலம் ஒவ்வொரு வருடமும் 60 ஆயிரம் இந்தியர்கள் ஒப்பந்த அடிப்படையில் அமெரிக்காவுக்குள் வருகின்றனர். அவர்களின் இருப்பு மற்றும் அவர்கள் குடும்பங்களின் இருப்பு முற்றிலுமாக வேலை வழங்குபவர், புதிய நிர்வாகம், மேலும் குடிவரவு தீர்ப்பாளர்களின் கையில் உள்ளது என்று அமன் கபூர் தெரிவித்தார். அவர் இமிக்ரேஷன் வாய்ஸின் தலைவராக உள்ளார்.

இமிக்ரேஷன் வாய்ஸ் உறுப்பினர்கள், அதிகாரம் ஐ.என்.ஏ பிரிவு 212(எஃப்)-ஐ பயன்படுத்தி, தற்போது அமெரிக்காவில் இல்லாத, இந்தியாவில் பிறந்த தனிநபர் எவருக்கும் 2022 நிதி ஆண்டில் அமெரிக்காவுக்கு முதன்முறையாக வருகை புரிய எச்1பி விசாவை வழங்க விலக்கு அளிக்க வேண்டுமென்று கூறியுள்ளது. மேலும் இது போன்ற விசாக்களை, வேலை அடிப்படையில், மாவட்ட வரம்புகளுக்கு உட்படுத்தி வழங்குவதை நிறுத்த வேண்டும் என்றும், ஏற்கனவே அமெரிக்காவில் குடியேறியவர்கள் ஒப்பந்த ஊழியர்களாக இனி கருதப்படுவதில்லை என்றும் கபூர் தெரிவித்தார்.

இமிக்ரேசன் வாய்ஸ் என்பது 130,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஒரு தேசிய இலாப நோக்கற்ற அமைப்பாகும்அவர்கள் வரி செலுத்தும், சட்டத்திற்கு உட்பட்ட, திறமையான புலம் பெயர்ந்தோர். மேலும் வேலை, பயணம், மற்றும் பணி நிலைமைகள் தொடர்பாக உயர் தகுதி கொண்ட புலம்பெயர்ந்ந்தோர் எதிர்கொள்ளும் தடைகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள். அவர்கள் மேலும் அமெரிக்காவில் மருத்துவர்களாக, ஆராய்ச்சியாளர்களாக, பொறியாளர்களாக, அமெரிக்காவின் 500 நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் காங்கிரஸின் கட்டளைப்படி 85 ஆயிரம் எச்1பி விசாக்களை அமெரிக்கா வழங்குகிறது. அதில் 70%, அதாவது 60 ஆயிரம் விசாக்கள் இந்தியாவில் இருந்து வரும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது என்று இமிக்ரேசன் வாய்ஸ் கூறியுள்ளது.

ஆனால் நாடுகளின் அடிப்படையில் எடுத்துக் கொண்டால், ஆண்டுக்கு வழங்கப்படும் 1,20,000 குடியுரிமைகளில் 8400 இந்தியர்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படுகிறது. நாடுகள் அடிப்ப்படையில் வழங்கப்படும் க்ரீன் கார்டுகள் முழுவதுமாக இந்தியாவை புறக்கணிக்கும் ஒரு சட்டமாகும். இதில் பெண்களும் குழந்தைகளும் அதிக அளவில் பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இன்றைய சூழலில் துணை அதிபரின் தாயார் அமெரிக்காவுக்கு வந்தால், தன்னுடைய வாழ்நாளில் க்ரீன் கார்டினை வாங்கியிருக்கவே முடியாது என்றும் அமன் கபூர் கூறினார்.

source 

https://tamil.indianexpress.com/international/biden-admin-urged-not-to-issue-h-1b-to-indians-till-country-cap-on-green-card-is-removed-247049/