இந்தியா பாகிஸ்தான் தரப்பில் கடந்த மூன்றூ மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தானின் மக்கள் – ராணுவ தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி வந்துள்ளனர். வருகின்ற காலங்களில் மிகவும் அமைதியை நோக்கி பல்வேறு முன்னெடுப்புகள் நடக்க உள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தோவல், இம்ரான் கானின் சிறப்பு உதவியாளராக பாதுகாப்பு விவகாரங்களில் பணியாற்றும் மொயீத் யூசஃபை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் மேலும் பாகிஸ்தானின் ராணுவ தளபது கமார் ஜாவத் பஜ்வாவுடனுன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிய வந்துள்ளது. யூசப் கானுக்கு மிக அருகிலும் அதே நேரத்தில் ராணுவத்துடனும் நல்ல தொடர்பில் இருக்கிறார். பஜ்வா பாகிஸ்தான் ராணுவத்தின் சக்தியாக திகழ்கிறார் எனவே இவர்கள் இருவரும் முக்கியான தொடர்பாக இதில் உள்ளனர்.
வியாழக்கிழமை அன்று யூசப் இது போன்ற பேச்சுவார்த்தை எதுவும் தோவலுடன் நடைபெறவில்லை என்றும் அந்த தகவல்கள் ஆதாரமற்றவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நிர்வகிக்கப்பட வேண்டிய கருத்தினை மனதில் கொண்டு இரு தரப்பினரும் இந்த பேச்சுவார்த்தை தொடர்பான தகவல்களை வெளியிட மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க : ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை; இந்தியாவிற்கு மேலும் ஒரு சோதனை
கட்டுப்பாட்டுப் பாதையில் யுத்த நிறுத்த உடன்படிக்கைகளை கடைப்பிடிப்பதாக இரு படைகளும் அறிவித்த சில மணிநேரங்களிலேயே மாற்றத்தின் முதல் அறிகுறிகள் தெரிந்தன. இது குறித்து வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், “இந்தியா பாகிஸ்தானுடனான இயல்பான, நட்பு உறவினையே விரும்புகிறது. ஏதேனும் இருந்தால், அமைதியான இருதரப்பு முறையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்பதை நாம் எப்போதும் பின்பற்றுகிறோம். முக்கிய விஷயங்களில், நம் நிலைப்பாடு மாறாமல் உள்ளது. நான் அதை மீண்டும் வலியுறுத்த தேவையில்லை என்றார்.
பயங்கரவாதமும் பேச்சுவார்த்தைகளும் ஒன்றாக போவதில்லை என்ற டெல்லியின் நிலைப்பாட்டை மீண்டும் மீண்டும் அழுத்தத்துடன் தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்படவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான நிதி நடவடிக்கை குறித்து (Financial Action Task Force) எழுப்பிய கேள்விக்கு பதில் கூறவில்லை அவர். மேலும் பயங்கரவாதத்திற்கான நிதி தொடர்பாக இஸ்லமாபாத் கூறிய கருத்து குறித்தும் அவர் பதிவிடவில்லை. FATF அதன் சொந்த நடைமுறைகளைக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
எல்.ஓ.சி.யில் நடைமுறைக்கு வந்துள்ள யுத்த நிறுத்தம் தொடர்பான முடிவு குறித்து யூசஃப் ட்வீட் செய்துள்ளார். அதில், டி.ஜி.எம்.ஓக்களின் நிறுவப்பட்ட சேனல் மூலம் விவாதங்களின் விளைவாக இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. வெளிப்படையாக இவை இயல்பாகவே பொதுமக்கள் பார்வையில் இல்லை மற்றும் தனிப்பட்ட சேனலின் மூலம் தனிப்பட்ட முறையில் இவை மேற்கொள்ளப்பட்டது. எல்.ஓ.சி. தொடர்பான புரிதல் நல்ல மாற்றங்களுக்கு வழி வகுக்கும். இது அப்பாவி மக்களின் உயிர்களைக் காப்பாற்றும் என்று பாகிஸ்தான் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் விமானப்படை அகாடமிக்கு சென்ற பாஜ்வா பிப்ரவரி 2ம் தேதி அன்று “பரஸ்பர மரியாதை மற்றும் அமைதியான சகவாழ்வுக்கான இலட்சியத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எல்லா திசைகளிலும் அமைதியை பின்பற்ற வேண்டிய நேரம் இது. ஜம்மு-காஷ்மீரின் நீண்டகால பிரச்சினையை அம்மக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்ப கண்ணியமாகவும் அமைதியாகவும் பாகிஸ்தானும் இந்தியாவும் தீர்க்க வேண்டும், மேலும் இந்த மனித துயரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் அவர் கூறினார்.
370வது அரசியல் சாசனப்பிரிவி ரத்து செய்யப்பட்ட்ட பிறகு பாகிஸ்தானிடம் இருந்து வந்த இணக்கமான கருத்துகளில் இதுவும் ஒன்று என்று அரசியல்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமைதி வேண்டும் என்றால் முன்னோக்கிச் செல்ல வேண்டும். முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றால் அனைவரும் பகுத்தறிவுடன் இருக்க வேண்டும். கருத்தியல் ரீதியாக இருக்க வேண்டாம் என்று யூசப் மேற்கோள் காட்டினார்.
பிப்ரவரி 18 அன்று, தெற்காசியா மற்றும் இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒன்பது நாடுகளின் சுகாதார செயலாளர்களின் கூட்டத்தில் பாகிஸ்தான் பங்கேற்றது, அதே நேரத்தில் இந்த வார தொடக்கத்தில், இலங்கைக்கு செல்லும் வழியில் இம்ரான் கானின் விமானம் இந்திய விமான இடத்திற்கு மேலே பறக்க டெல்லி அனுமதித்தது. பதான்கோட் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு ஒரு இடைவெளி ஏற்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃபை பார்ப்பதற்கு பிரதமர் மோடி லாகூர் சென்றார். அதன் பின்னர் ஒரு வாரம் கழித்து பதான்கோட் தாக்குதல் நடைபெற்றது. உரி மற்றும் புல்வாமா தாக்குதல்கள், அரசியல் சட்டப்பிரிவி 370 நீக்குதல் ஆகியவை பேச்சுவார்த்தையில் மிகப்பெரிய இடைவெளியை உருவாக்கியது. இரண்டு பக்கமும் ராஜதந்திர நடவடிக்கைகளை குறைத்தனர். கடந்த ஆண்டு அது இன்னும் குறைந்து போனது.
source https://tamil.indianexpress.com/india/ceasefire-pact-back-channels-open-for-3-months-via-doval-imran-aide-and-pak-army-chief/