புதன், 10 பிப்ரவரி, 2021

பனிப்பாறைகள் வெடிப்பை எவ்வாறு சமாளிப்பது?

source : https://tamil.indianexpress.com/explained/how-to-tackle-a-glacial-burst-246553/ 

 உத்திரகாண்டின் சமோலியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கத்திற்கு பனிப்பாறையின் சரிவே காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கடந்த அக்டோடபர் மாதம் பிரதமர் தலைமை வகிக்கும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பனிப்பாறை ஏரிகள் உடைப்பினால் ஏற்படும் வெள்ளத்தை (Glacial Lake Outburst Floods (GLOFs)) எப்படி குறைப்பது மற்றும் சமாளிப்பது என்பது குறித்து வழிகாட்டுதல்களை வெளியிட்டது.

Glacial Lake Outburst Floods (GLOFs) என்றால் என்ன? இமயமலைகளில் இது எவ்வளவு பாதிப்பை தரக்கூடியது?

பனிப்பாறைகள் உருகும் போது, பனிப்பாறைகள், பனி, கற்கள், மண் மற்றும் கூழாங்கற்களால் ஆன க்ளாசியல் அல்லது மொரைன் அணைகளை தளர்வாக்குகிறது. GLOFs என்பது இது போன்ற தளர்வான அணைகளில் இருந்து திடீரென ஏற்படும் வெள்ளப்பெருக்கினையே குறிப்பிடுகிறது.

நாம் வாழக்கூடிய பகுதிகளில் கட்டப்படும் அணைகள் போல் இல்லாமல், மொரைன் அணைகள் பலவீனமாக இருப்பதால் பனிப்பாறை ஏரியின் தோல்விக்கு வழி வகுக்கிறது. இது அதிக அளவு நீரை வெளியேற்றுகிறாது. இது போன்ற அணைகள் சேதம் அடைவதால் மில்லியன் கணக்கில் க்யூபிக் மீட்டர்கள் நீரை குறைந்த நேரத்தில் வெளியேற்றும். இது கீழே இருக்கும் பகுதியில் அளவுக்கு அதிகமான வெள்ளப்பெருக்கிற்கு வழி வகை செய்யும். வினாடிக்கு 15000 கன மீட்டர் என்பதே நாம் இதுவரையில் பதிவு செய்திருக்கும் மிக மோசமான பதிவாகும்.

தேசிய பேரிடர் மேலாண்மை படி, காலநிலை மாற்றாத்தால் இந்து குஷ் மலையின் பல்வேறு பகுதிகளில் பனிப்பாறைகள் உருகுகின்றன. இதனால் புதிய பனி ஏரிகள் உருவாகுகிறது. இது அதிகப்படியான GLOF-ற்கு வழிவகுக்கிறது.  மத்திய நீர் ஆணையத்தின் காலநிலை மாற்ற இயக்குநரகம் உருவாக்கிய Inventory and Monitoring of Glacial Lakes / Water Bodies in the Himalayan Region of Indian River Basins அமைப்பு 2011 முதல் 2015 வரையில் தேசிய தொலைநிலை மையத்தால் ஆராயப்பட்டது. அதில் சிந்து, கங்கை, மற்றும் பிரம்மபுத்திரா ஆகிய நதிப்படுகைகளில் முறையே 352, 283, மற்றும் 1393 பனிப்பாறைகள் மற்றும் நீர் நிலைகள் உள்ளன என்று கூறியுள்ளது.

How to tackle a glacial burst

இந்த பகுதியில் ஏற்படும் அபாயத்தை எப்படி குறைக்கலாம்?

இது போன்ற ஏரிகளை கண்டறிவது, தீடீரென ஏற்படக்கூடிய சீற்றத்தில் இருந்து தப்பிக்க கட்டுமான நடவடிக்கைகளை மேற்கொள்வது, பேரிடர் காலங்களில் மனித உயிர்களையும் உடமைகளையும் காப்பாற்றுவது குறித்து தேசிய பேரிடர் மேலாண்மையின் வழிகாட்டுதல்கள் அறிவித்துள்ளது.

அந்த வழிகாட்டுதல்களின் படி, காலநிலை மாற்றதால் ஏற்படும் பனிப்பாறை உருகுதல் நிகழ்வால் இந்து குஷ் மலையில் அதிக அளவில் பனி ஏரிகள் உருவாகியுள்ளது. கள நடவடிக்கைகள், முந்தைய காலத்தில் ஏற்பட்ட நிகழ்வுகளின் பதிவுகள், புவிசார்வியல் மற்றும் புவிசார் தொழில்நுட்ப பண்புகள் ஆகியவற்றை கொண்டு இது போன்ற ஏரிகளை கண்டறிய முடியும்.

நீர்நிலைகளில் ஏற்படும் மாற்றங்களை அறிய தேசிய பேரிடர் மேலாண்மை சின்த்தெட்டிக் அபேச்சர் ரேடார் இமாஜிரியை (Synthetic-Aperture Radar imagery) பயன்படுத்துமாறு கூறியது. விண்வெளியில் இருந்து ஏரிகளை கண்காணிக்க அனுமதிக்க முறைகள் மற்றும் நெறிமுறைகளையும் உருவாக்க வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.

ஏரிகளை கட்டுமான ரீதியாக நிர்வகித்தல் குறித்து, கட்டுப்படுத்தப்பட்ட முறையில் அளவுக்கு அதிகமான நீரை வெளியேற்றுதல் குறித்து கூறியுள்ளது. பம்ப் அல்லது சிப்போனிங் மூலம் நீரை வெளியேற்றுதல் மொரைன் தடுப்பணை அல்லது பனி அணிக்கு கீழே சுரங்கம் அமைத்து அது வழியாக நீரை வெளியேற்றுதல் போன்றவற்றை பரிந்துரை செய்துள்ளது.

லடாக்கின் கார்கில் மாவட்டத்தில், டிசம்பர் 31, 2014 அன்று ஃபுக்த்லில் (Phuktal) (ஜான்ஸ்கர் ஆற்றின் துணை நதி) ஒரு நிலச்சரிவு ஏற்பட்டது, இது மே 7, 2015 அன்று வெள்ள அபாயத்திற்கு வழிவகுத்தது. என்.டி.எம்.ஏ ஒரு நிபுணர் பணிக்குழுவை உருவாக்கியது, இது இராணுவத்துடன் சேர்ந்து பணியாற்றியது. நதியில் இருந்து நீரை வெடிபொருட்கள் மூலம் திசை திருப்பியது.

How to tackle a glacial burst

இந்தியா எந்த அளவுக்கு தயார் நிலையில் உள்ளது?

இத்தகைய ஏரிகளை அடையாளம் காண்பதற்கான பணிகள் நீர் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டது. வலுவான எச்சரிக்கை அமைப்பு மற்றும் பாதிக்கப்படக்கூடிய மண்டலங்களின் உள்கட்டமைப்பு மேம்பாடு, கட்டுமானம் மற்றும் ஆய்வுக்கான முறைகள் போன்ற அம்சங்கள் இன்னும் ஆராயப்பட்டு வருகிறது.

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், அங்கே ஒரே மாதிரியான ஆய்வு கட்டுமானம் மற்றும் தர நிர்ணய குறிக்கோள்கள் இல்லை. கட்டுமானங்களை தடுத்தல், GLOF/LLOF பகுதிகளில் மேம்பாடுகளை குறித்தல் போன்றவை அபாயங்களை குறைப்பதற்கான மிகச்சிறந்த நடவடிக்கைகளாகும் என்று என்.டி.எம்.ஏ வழிகாட்டுதல் கூறியுள்ளது.

அதிக ஆபத்து நிறைந்த பகுதியில் எந்தவொரு வசிப்பிடத்தையும் கட்டுவது தடை செய்யப்பட வேண்டும் என்று வழிகாட்டுதல்கள் கூறுகின்றன. “தற்போதுள்ள கட்டிடங்கள் பாதுகாப்பான அருகிலுள்ள பகுதிக்கு மாற்றப்பட வேண்டும், இடமாற்றம் செய்வதற்கான அனைத்து வளங்களையும் மத்திய / மாநில அரசாங்கங்கள் நிர்வகிக்க வேண்டும். நடுத்தர ஆபத்து மண்டலத்தில் புதிய உள்கட்டமைப்புகள் குறிப்பிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இருக்க வேண்டும். ” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


வழிகாட்டுதல்கள் நில பயன்பாட்டு திட்டத்தினை வலியுறுத்துகிறது. இந்தியாவில் GLOF / LLOF-னால் பாதிப்பிற்கு உள்ளாகும் பகுதிகளில் நில பயன்பாடு தொடர்பான திட்டங்கள் ஏதும் இல்லை. இது போன்ற நடைமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். கீழ்நிலைப் பகுதியில் உள்கட்டமைப்பு மற்றும் குடியேற்றங்களை நிர்மாணிப்பதற்கு முன்பும் கண்காணிப்பு அமைப்புகள் இருக்க வேண்டும்.

ஆரம்ப எச்சரிக்கை அமைப்புகள் உள்ளனவா?

செயல்படுத்தப்பட்ட மற்றும் செயல்படும் GLOF EWS இன் எண்ணிக்கை உலக அளவில் கூட மிகக் குறைவு. இமயமலைப் பிராந்தியத்தில், GLOF ஆரம்ப எச்சரிக்கைக்கு சென்சார் மற்றும் கண்காணிப்பு அடிப்படையிலான தொழில்நுட்ப அமைப்புகளை செயல்படுத்திய மூன்று நிகழ்வுகளில் (நேபாளத்தில் இரண்டு மற்றும் சீனாவில் ஒன்று) உள்ளன.

இருப்பினும் இந்தியாவில் நிலச்சரிவால் ஏற்படும் வெள்ள அபாய சீற்றம் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வெற்றிகரமாக 19ம் நூற்றாண்டிலேயே நடைபெற்றுள்ளது. 1894ம் ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவு உத்தரகாண்ட்டின் முக்கிய நதியில் அணையை உருவாக்கியது. ஜூலை 5 அதே ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் அந்த அணை நிரம்பி வழியும் என்று கூறியிருந்தார். இறுதியில் அது அரங்கேறியது.

அந்த வெள்ளத்தினால் பெரிய தாக்கம் ஏற்பட்ட போதும் அனைத்து கட்டிடங்களும் அடித்து செல்லப்பட்ட போதும் கூட உயிர் பலி ஏதும் ஸ்ரீநகரில் ஏற்படவில்லை. இது அந்த ஏரிக்கும் கீழே சமோலி, ஸ்ரீநகருக்கும் டெலிபோன் இணைப்பை கொடுத்ததால் சாத்தியமானது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

மீட்புப் பணிகளுக்கான வழிகாட்டுதல்கள் என்ன?

என்.டி.ஆர்.எஃப், ஐ.டி.பி.பி மற்றும் ராணுவம் போன்ற சிறப்புப் படைகளை சார்ந்திருப்பது மட்டுமின்றி பயிற்சி பெற்ற உள்ளூர் மனிதவளத்தின் அவசியத்தை என்.டி.எம்.ஏ வலியுறுத்தியுள்ளது.  அரசின் சிறப்பு குழுக்கள் மற்றும் மீட்பு படையினர் வருவதற்கு முன்பு 80% தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை உள்ளூர் மக்களே மேற்கொண்டுவிடுகின்றனர். பயிற்சி பெற்ற உள்ளூர் குழுக்கள் இந்த பகுதியில் நியமிக்கப்பட வேண்டும் என்று என்.டி.எம்.ஏ கூறுகிறது. இந்த உள்ளூர் குழுக்கள் திட்டங்கள் மற்றும் அவசர கால மாற்றிடங்கள், நிவாரண பொருட்களை வழங்குதல், காணாமல் போனவர்களை கண்டறிதல், உணவு, மருத்துவம் மற்றும் நீர் விநியோகம் போன்ற தேவைகளை அடையாளப்படுத்த உதவுவார்கள்.

விரிவான அலாரம் அமைப்புகளும் தேவை என்று கூறியுள்ளது. வெறும் சைரன் ஒலிப்பெருக்கிகள் மட்டும் அல்லாமல் நவீன தேவைகளுக்காக ஸ்மார்ட்போன்கள் மற்றும் செல்களையும் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.  அதிகப்படியான கட்டிட இடர்பாடுகளை அகற்றவும், தேடவும், மீட்கவும் உதவிகள் தேவை என்று கூறியுள்ளது. மோட்டர் லான்ச்கள், படகுகள், மூழ்காத ரப்பர் படகுகள், லைஃப் ஜாக்கெட் போன்றவையும் தேவை. இமயமலையில் பேரழிவு ஏற்படும் பகுதிகளில் எர்த்மூவர்களை கொண்டு செல்வதில் கஷ்டம் இருக்கிறது என்பதை ஒப்புக் கொண்ட என்.டி.எம்.ஏ. உள்ளூரிலேயே கிடைக்கும் இயற்கை வளங்களை புதுமையான முறையில் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.

“இலகுவான இயந்திரங்களை கண்டுபிடிப்பது மற்றும் வடிவமைப்பது முக்கியம், அவை தனித்தனியாக பிரிக்கப்பட்டு மலைகளில் கொண்டு செல்ல மிகவும் பொருத்தமானவை” என்று அது கூறியுள்ளது, இந்த பகுதிகளுக்கு அதனை ஹெலிகாப்டரில் கொண்டு செல்ல முடியும் என்று பரிந்துரைத்துள்ளது.   அவசர மருத்துவ பதிலுக்காக, விரைவான எதிர்வினை மருத்துவ குழுக்கள், மொபைல் கள மருத்துவமனைகள், விபத்து நிவாரண மருத்துவ வேன்கள் மற்றும் சாலைகள் மூலம் அணுக முடியாத பகுதிகளில் ஹெலி ஆம்புலன்ஸ்கள் என என்.டி.எம்.ஏ அழைப்பு விடுத்துள்ளது. பத்திரிகையாளர் சந்திப்புகள் மற்றும் வெகுஜன ஊடகங்கள் மூலம் துல்லியமான தகவல்களைப் பரப்புவதைத் தவிர, பாதிக்கப்பட்டவர்களின் உளவியல் ஆலோசனையையும் இந்த வழிகாட்டுதல்கள் கோருகின்றன.