செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

சென்னை ஐஐடியில் கப்பல் போக்குவரத்து சிமுலேட்டர் : பயன்கள் என்ன?

 சென்னையை அடுத்த தையூரில், 2 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில், உலகத் தரம் வாய்ந்த ஆராய்ச்சி மையங்களை உள்ளடக்கிய சென்னை ஐஐடியின் டிஸ்கவரி வளாகத்தை நேற்று பிரதமர் தறிந்து வைத்தார்.

இந்த ஆய்வகத்தில் 360 டிகிரி பிரிட்ஜ் ஷீப் சிமுலேட்டர்  நிறுவப்படவுள்ளது. சென்னை ஐ.ஐ.டி-யில் உள்ள  துறைமுகங்கள், நீர்வழிகள் மற்றும் கடலோரங்களுக்கான தேசிய தொழில்நுட்ப மையத்தில் இந்த சிமுலேட்டர் நிறுவப்படவுள்ளது.

இந்த தேசியத் தொழில்நுட்ப மையம், மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் முன்னோடித் திட்டமான சாகர்மாலா திட்டத்தின் கீழ் அமைக்கப்படுகிறது. இந்த மையம் மத்தியக் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் தொழில்நுட்பக் களமாக அமைந்து துறைமுகங்கள், இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையம் மற்றும் பிற நிறுவனங்களுக்குப் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை அளிக்கும்.

மேலும், செடிமென்டேஷன்,பெருங்கடல்  நீரோட்டங்கள், காற்றழுத்தம் காரணமாக துறைமுகங்கள், கடல் சார் துறைகளில் ஏற்படும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காட்டும் வகையில் உலகின் மிகப்பெரிய ஆழமற்ற நீர் படுகைகளும் உருவாக்கப்பட உள்ளது .

அதைத் தொடர்ந்து, டிஸ்கவரி வளாகத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) நிதியுதவியுடன் திட உந்து எரிபொருள் மாதிரிவசதி மையமும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த சிமுலேட்டர், வெளிச்சமின்மை, வலுவான காற்று நீரோட்டங்கள் போன்ற வெவ்வேறு நிலைமைகளில் துறைமுகங்களை திறன்பட அணுகுவதற்கு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும்

வெகு விரைவில், சென்னை ஐஐடியின் டிஸ்கவரி வளாகம், புதுமைப் படைப்பதில் முன்னணி மையமாக உருவெடுக்கும் என பிரதமர் திறப்பு விழாவின் போது தெரிவித்தார். இந்தியா முழுவதிலும் இருந்து திறமையானவர்களை அது உருவாக்கும் என்றும் கூறியிருந்தார்.

கடந்த 2017ம் ஆண்டு, இந்த டிஸ்கவரி வளாகத்திற்கு,  அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சென்னை கேளம்பாக்கம் அடுத்த தையூரில் 163 ஏக்கர் நிலத்தை ஐஐடி-க்கு வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

source https://tamil.indianexpress.com/education-jobs/iit-chennai-discovery-campus-will-have-ship-bridge-simulator-and-largest-shallow-water-basins-in-the-world/