வெள்ளி, 19 பிப்ரவரி, 2021

விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் : பல இடங்களில் ரயில் போக்குவரத்து தடை

 மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்ட போட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் மத்திய அரசு விவசாயிகளிடம் நடத்திய பேச்சுவார்த்தை அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இதனால் இந்த போராட்டம் தீவிரமடைந்த நிலையில், கடந்த ஜனவரி 26-ந் தேதி குடியரசு தினத்தன்று டெல்லி செங்கோட்டையை நோக்கி டிராகடர் பேரணி நடத்தினர்.

அமைதியாக நடத்த திட்டமிடப்பட்ட இந்த பேரணியில்,  வன்முறை வெடித்ததால், காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டு, தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தி ஆர்பாட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.  அதுவரை அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வந்த விவசாயிகளுக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் இருந்தது. இதனால் அடுத்து விவசாயிகள் என்ன செய்யப்போகிறார்கள் என் எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு தலைமை தாங்கும் உழவர் சங்கங்களின் அமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா (எஸ்.கே.எம்), கடந்த வாரம் நாடு தழுவிய ரயில் முற்றுகையை அறிவித்து, சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, போராட்டம் மதியம் 12 மணி முதல் 4 மணி வரை இருக்கும் என்று கூறியிருந்தது. தொடர்ந்து இந்த போராட்டத்தின் அடுத்தக்கட்டமாக விவசாயிகள் இன்று நாடு தழுவிய சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா.   இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் பல இடங்களில் விவசாயிகள் ரயில் தடங்களில் அமர்ந்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகாரிகள் நிலையங்களில் ரயில்களை நிறுத்தினர்.

இதில் ஹரியானாவின் குருக்ஷேத்திர விவசாயிகள் கீதா ஜெயந்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் லோகோமோட்டிவ் மீது ஏறியதாக தகவல் வெளியானது. இதனால் “ரயில் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டு மதியம் 3 மணிக்குப் பிறகு ரயில் புறப்பட திட்டமிடப்பட்டது” என்று குருக்ஷேத்திரத்தில் உள்ள ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பஞ்சாபில், டெல்லி-லூதியானா-அமிர்தசரஸ் ரயில் பாதையில் போராட்டகாரர்கள் பல இடங்களில் ரயில் தடங்களில் அமர்ந்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் ஜலந்தரில் உள்ள ஜலந்தர் கான்ட்-ஜம்மு ரயில் பாதையை விவசாயிகள் தடுத்தனர், மொஹாலி மாவட்டத்திலும் விவசாயிகள் ஒரு ரயில் பாதையைத் தடுத்தனர். ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய இரு மாநிலங்களிலும், ரயில்வே காவல்துறையினர் மற்றும் மாநில போலீஸ் படைகள் பாதுபாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ‘ரெயில் ரோகோ’ போராட்டத்தின் போது பயணிகள் எதிர்கொள்ளும், சிரமங்களை குறைக்கும் வகையில், வடக்கு ரயில்வேயின் ஃபெரோஸ்பூர் பிரிவு நிலையங்களில் ரயில்களை நிறுத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

இதில் ஹரியாணா மாநிலம் ஜிந்த் பகுதியில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்துகாண்டனர். மேலும் விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டத்தினால், ரயில்களின் போக்குவரத்து தாமதமாகிவிடும் என்று தெரிவித்த அதிகாரிகள், போராட்டம் முடிந்ததும் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

source 

https://tamil.indianexpress.com/india/delhi-farmers-protest-rail-roko-protest-update-all-india-248217/