இந்தியா வந்தடையும் சர்வதேச பயணிகளுக்கு மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. புதிய நெறிமுறைகளின்படி, அனைத்து சர்வதேச பயணிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் மற்றும் விமானத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் அவர்களின் நெகட்டிவ் சோதனை அறிக்கைகளைப் பதிவேற்ற வேண்டும். இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட கோவிட் -19-ன் மாறுபட்ட வகைகளின் புழக்கத்தின் அறிக்கைகள் அதிகரித்ததைத் தொடர்ந்து புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஏன் சர்வதேச பயணிகளுக்கான புதிய கோவிட்-19 வழிகாட்டுதல்கள்?
புதிதாக உருமாறியிருக்கும் கொரோனா வைரஸின் பரவுதலைக் கட்டுப்படுத்துவதற்காகவே புதிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
யாருக்கெல்லாம் இது பொருந்தும்?
இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசிலிருந்து நேரடி விமானங்கள் எதுவும் இல்லாதாக் காரணத்தால் லண்டன், ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு விமானங்கள் மூலம் லண்டன், பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து பயணிக்கும் பயணிகளுக்கு இந்த புதிய வழிமுறைகள் பொருந்தும்.
புதிய SOP
புதுப்பிக்கப்பட்ட ஏர் சுவிதா போர்டல் பயணிகளுக்குக் கட்டாய சுய அறிவிப்பு படிவத்தை சமர்ப்பிக்கும்படி கேட்கும். உள்நாட்டு இணைப்புகளைக் கொண்ட பயணிகளுக்கான மற்றொரு புலம் வழங்கப்பட்டுள்ளது. இது தேவைப்பட்டால் தொடர்புத் தடமறிதல் செய்ய அதிகாரிகளுக்கு உதவும்.
சோதனையில் பயணிகள் நெகட்டிவ் முடிவுகளைப் பெற்றால், வீட்டு தனிமைப்படுத்தலில் 7 நாட்கள் இருக்கவேண்டும். பிறகு மறுபடியும் சோதனை எடுக்கப்படும்.
இந்த சோதனையிலும் நெகடிவ் முடிவு வந்தால், அவர்களுடைய உடல்நிலையை அவர்களே அடுத்த 7 நாட்களுக்கு நன்கு பார்த்துக்கொள்ளவேண்டும்.
ஒருவேளை, விமான நிலையத்தை அடைந்ததிலிருந்து, தனிமைப்படுத்துதல் வரை எந்த நிலையிலும் பாசிட்டிவ் என முடிவு வந்தால், நிச்சயம் சிகிச்சை நெறிமுறைகளைப் பின்பற்றவேண்டும்.
இவர்கள், நிச்சயம் அவர்களுடைய முகவரியை சுய அறிவிப்பில் பதிவு செய்திருக்கவேண்டும்.
சோதனையைக் கருத்தில்கொண்டு ஒரு விமானத்திலிருந்து மற்றொரு விமானத்திற்கு 6-8 மணிநேரம் இடைவெளி இருக்கவேண்டும்.
லண்டன், பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து பயணம் செய்பவர்களின் பட்டியலைக் கண்காணிக்கவேண்டியது ஒவ்வொரு விமான நிலையங்களின் கடமை.
இந்த நாடுகளிலிருந்து பயணிக்கும் பயணிகளின் பாஸ்போர்ட்டுகளை கண்டறிந்து செயல்படுவது இம்மிக்ரேஷன் அதிகாரிகளின் கடமை.
தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட மற்ற பயணிகளுக்கான விதிமுறைகளில் எந்த மாற்றமும் இல்லை.
இருப்பினும், இந்த நாடுகளிலிருந்து பாசிட்டிவ் முடிவு பெற்ற பயணிகளின் தொடர்பிலிருந்த மற்ற பயணிகள் நிறுவன தனிமைப்படுத்துதலில் இருக்கவேண்டும். இவர்களுக்கு ஏழு நாட்களுக்கு பிறகு அல்லது அறிகுறிகளை பொறுத்து அதற்கு முன்னதாகவோ சோதனை செய்யப்படும்
source https://tamil.indianexpress.com/explained/covid-19-india-international-passengers-guidelines-tamil-news-249494/