ஞாயிறு, 7 பிப்ரவரி, 2021

இந்தியாவிடம் வாங்கிய 400 மில்லியன் டாலர்: கணக்கை முடித்த இலங்கை

 400 மில்லியன் அமெரிக்க டாலர் நாணய பரிமாற்ற வசதியை இலங்கை முடித்து வைத்துள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியும், இலங்கை மத்திய வங்கியும்  கடந்த ஆண்டு ஜூலை மாதம் சார்க் உறுப்பு நாடுகளுக்கு இடையே 400 மில்லியன் அமெரிக்க டாலர் நாணய பரிமாற்ற ஏற்பாட்டுக்கு ஒப்புதல் அளித்தன.

 

 

இந்நிலையில், இலங்கை மத்திய வங்கி தனது ட்விட்டரில், ”  உரிய நேரத்தில் இந்தியாவிடம் இருந்து பெற்ற நாணய பரிமாற்ற வசதியை  திருப்பிச் செலுத்தி விட்டோம். ஊடங்களில் தெரிவிக்கப்படுவது போல், தொகையை முன்கூட்டியே செலுத்தும்படி இந்தியாவிடம் இருந்து எந்த சிறப்பு கோரிக்கையும் விடுக்கப்படவில்லை” என்று பதிவிட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய உடன்பாட்டை இலங்கை திரும்பி பெற்றதையடுத்து இந்த வசதியை இந்திய ரிசர்வ் வங்கி திரும்ப செலுத்தக்கூறியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

கிழக்கு பகுதியில் கண்டெய்னர் டெர்மினலை இலங்கை துறைமுகம் ஆணையம் சொந்தமாக உருவாக்கும் என்று மகிந்தராஜபக்‌ஷ அறிக்கை வெளியிட்ட பிறகு, மேற்கு பகுதியில் அமைய இருக்கும் கண்டெய்னர் டெர்மினலை இந்தியா மற்றும் ஜப்பானுடன் இணைந்து உருவாக்க உள்ளதாக  அந்நாட்டு அரசு அறிவித்தது.

source https://tamil.indianexpress.com/international/central-bank-of-srilanka-settled-its-swap-facility-with-reserve-bank-of-india-as-scheduled-246139/