பார்படோஸ் பாப் பாடகி ரிஹான்னா மற்றும் காலநிலை மாற்றத்திற்காக குரல் கொடுக்கும் கிரெட்டா ஆகியோர் டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்ததை தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்நிலையில் அமெரிக்காவில் ஆட்சியை பிடித்த பைடன் நிர்வாகம் முதன் முறையாக டெல்லியில் நிலைப்பாடு குறித்து அரசியல் ரீதியாக கருத்துகளை வெளியிட்டுள்ளது.
இரு தரப்பினருக்கும் இடையே இருக்கும் வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்று ஊக்குவிப்பதாக கூறிய அந்நிர்வாகம், இந்திய சந்தைகளின் செயல்திறனை அதிகரிக்கவும், பெரிய அளவிலான முதலீட்டை ஈர்க்க கொண்டு வரப்பட்ட முயற்சிகளையும் வரவேற்பதாக மூன்று வேளாண் சட்டங்கள் குறித்து அமெரிக்கா கூறியுள்ளது. இந்த கருத்தினை இந்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களுக்கான ஒப்புதலாக பார்க்கிறது.
“இணையம் உட்பட தகவல்களைத் தடையின்றி அணுகுவது கருத்துச் சுதந்திரத்திற்கு அடிப்படையானது மற்றும் வளர்ந்து வரும் ஜனநாயகத்தின் ஒரு அடையாளமாகும்” என்று டெல்லி எல்லையில் அமைக்கப்பட்டிருக்கும் போராட்டக்களங்களில் இணைய முடக்கம் செய்யப்பட்டிருப்பது குறித்து கூறியது.
புது டெல்லியும் பின்வாங்கவில்லை. அமெரிக்காவின் நிர்வாகத்திற்கு பதில் அளித்த புதுடெல்லி, செங்கோட்டையில் ஜனவரி 26ம் தேதி நடைபெற்ற வன்முறையை ஜனவரி 6ம் தேதி அன்று கேப்பிட்டல் ஹில்லில் நடைபெற்ற வன்முறையோடு ஒப்பிட்டது. மேலும் இவை எவ்வாறு உள்ளூர் சட்டங்கள் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றும் கூறியிருந்தது.
புதுடெல்லி இதுவரையில் உள்நாட்டு பிரச்சனை என்று கருதிய இந்த போராட்டம் குறித்து தனிநபர்களின் விமர்சனங்களுக்கு பதிலாக கூறப்பட்டது தற்போது ராஜதந்திர விசயமாக மாறியுள்ளது. இணைய கட்டுப்பாடுகள் குறித்து வாஷிங்டனின் கருத்துகள் ஒன்றும் இந்தியாவிற்கு புதிதல்ல. ஏற்கனவே ட்ரெம்ப் நிர்வாகத்தின் போது, ஜம்மு காஷ்மீரில், அரசியல் சாசன பிரிவு 370வை நீக்கிய போது, அமல்படுத்திய இணைய முடக்கம் தொடர்பாக கருத்துகள் பதிவு செய்யப்பட்டது.
மேலும் படிக்க : விவசாயிகளின் போராட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கூறிய ரிஹானா யார்?
அமெரிக்காவின் கருத்துக்களுக்கு வியாழக்கிழமை அன்று பதிலளித்த வெளியுறவுத்துறை அமைச்சகம் அமெரிக்காவின் கருத்துக்களை கவனத்தில் எடுத்துக்கொண்டதாக கூறியுள்ளது.
இந்தியா மற்றும் அமெரிக்கா பகிரப்பட்ட மதிப்புகளைக் கொண்ட துடிப்பான ஜனநாயக நாடுகள் என்று கூறிய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா, ஜனவரி 6ஆம் தேதி அன்று அமெரிக்காவில் உள்ள கேப்பிட்டல் ஹில்லில் நடைபெற்ற சம்பவத்தைப் போன்றே, இந்தியாவில் ஜனவரி 26ம் தேதியன்று வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையில் ஏற்பட்ட வன்முறையின் போது உணர்வுகளும் எதிர்வினைகளும் உருவாகின என்று மேற்கோள் காட்டினார். மேலும் உள்ளூர் சட்டங்களின்படி இந்த விவகாரங்கள் கருத்தில் கொள்ளப்பட்டது என்றும் அவர் கூறினார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது இதுபோன்ற சூழலில் இப்படியான கருத்துக்களை அவர்கள் முன்வைத்தனர் என்பதையும் நாம் முழுமையாக பார்க்க வேண்டும். அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் விவசாய சீர்திருத்தங்களுக்கு இந்தியா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை வரவேற்றுள்ளது என்பதையும் நாம் காண வேண்டும் என்றார் ஸ்ரீவஸ்தா.
எந்தவொரு போராட்டத்தையும் இந்தியாவின் ஜனநாயக நெறிமுறைகள் மற்றும் அரசியல் பின்னணியில் காணப்படவேண்டும் என்று கூறிய அவர் தற்போது இந்த பிரச்சனைகளை சரிசெய்ய சம்பந்தப்பட்ட விவசாய குழுக்களிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது என்றும் அறிவித்தார்.
தலை நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் மேற்கொண்டு புதிய வன்முறைகள் உருவாகக் கூடாது என்பதை புரிந்துகொண்டு இணைய சேவைகளை முடக்கி விட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறினார். பைடன் நிர்வாகத்தின் இந்த கருத்துக்கள் முதலில் வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத் துறையால் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் கேள்விகளின் போது அறிவிக்கப்பட்டது. பின்னர் இதனை புதுடெல்லியில் அமைந்திருக்கும் அமெரிக்க தூதரகம் செய்தி தொடர்பாளரால் மீண்டும் உறுதி செய்யப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
“அமைதியான ஆர்ப்பாட்டங்கள் எந்தவொரு வளர்ந்து வரும் ஜனநாயகத்தின் ஒரு அடையாளமாகும் என்பதை நாங்கள் உணர்கிறோம், மேலும் இந்திய உச்சநீதிமன்றமும் அதையே கூறியுள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இரு தரப்பினருக்கும் இடையிலான வேறுபாடுகள் உரையாடலின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்பதையே நாங்கள் ஊக்குவிக்கிறோம். பொதுவாக, இந்தியாவின் சந்தை செயல்திறனை மேம்படுத்துவதற்கும், அதிக தனியார் துறை முதலீட்டை ஈர்க்கும் நடவடிக்கைகளையும் அமெரிக்கா வரவேற்கிறது, ”என்று அமெரிக்க தூதரக செய்தித் தொடர்பாளர் கூறினார்.
புதன்கிழமை அன்று இந்திய அரசு வெளியிட்ட அறிக்கையின் பின்பே அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் இது தொடர்பாக கருத்தினை வெளியிட்டது என்று நம்பந்தகுந்த வட்டாரங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தன. தனிப்பட்ட நபர்களுக்கு பதில் அளிப்பது வழக்கத்தில் இல்லை. இருப்பினும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ரிஹானா மற்றும் தன்பர்க்கின் ட்வீட்டிற்காக தன்னுடைய வழக்கத்தில் இருந்து மாறியது. அரசு நிலைப்பாடு மாறும் என்ற கோணத்தில் அதில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். மேலும் சமூக வலைதள யதார்த்தங்கள் மற்றும் அங்கே செல்வாக்கு மிக்கவர்கள் பலரின் கருத்துகளை வடிவமைக்கும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறியது.
“கடந்த கால அரசாங்கங்கள் இதுபோன்ற மிகவும் சுறுசுறுப்பான சமூக ஊடக மண்டலத்தை கையாளவில்லை, அரசு அல்லது அரசு சாரா நிலைப்பாட்டினை பொருட்படுத்தாமல் அரசாங்கம் விமர்சனங்களுக்கு பதிலளிக்க வேண்டியது அவசியம்” என்று மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
source https://tamil.indianexpress.com/india/us-backs-reform-flags-internet-cut-india-draws-red-fort-capitol-parallel-245880/