கடந்த 2019-ம் ஆண்டு ஜம்மூ காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு ஜம்மூ காஷ்மீர் லடாக் ஆகிய பகுதிகளை யூனயன் பிரதேசங்களாக மாற்றப்படுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. இதனால் காஷ்மீர் முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவிய நிலையில், காஷ்மீர் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலபடுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஏற்பட்ட கலவரம் காரணமாக பல இடங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டது. இதனால் இந்தியா முழுவதும் அசாதாரன சூழ்நிலை நிலவியதை தொடர்ந்து, அரசியல் தலைவர்கள் அனைவரும் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டனர்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு சில அரசியல் கட்சிகள் ஆதரவும், சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பும் தெரிவித்து வந்த நிலையில், ஒரு வருடம் ஆகியும், அரசியல் தலைவர்களின் வீட்டுசிறைகளுக்கு விடுதலை அளிக்கப்படவில்லை. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ள தேசிய மாநாட்டு கட்சியின் துணைத்தலைவரும், தற்போதைய எம்பி பருக் அப்துல்லாவின் மகனுமான உமர் அப்துல்லா தானும் தனது குடும்ப உறுப்பினர்களும், ஜம்மு காஷ்மீர் அதிகாரிகளால் இன்றும் வீட்டுச்சிறையில் தான் இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இது ஆகஸ்ட் 2019 க்குப் பிறகு‘ நயா / புதிய ஜே & கே ’ஆகும். எந்த விளக்கமும் இல்லாமல் நாங்கள் எங்கள் வீட்டுச்சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளோம். நான், என் தந்தை (தற்போதைய எம்.பி.) மற்றும் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பூட்டிய வீட்டில் அடைக்கப்பட்டிருப்பது மிகவும் மோசமானது. மேலும் என் சகோதரியையும் குழந்தைகளையும் அவர்கள் வீட்டில் வைத்து பூட்டப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவரது வீட்டின் வாசலுக்கு வெளியே போலீஸ் வானங்கள் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள அவர், “சாலோ, இது தான் உங்களது புதிய ஜனநாயகம். எவ்வித காரணமும் இல்லாமல், நாங்கள் எங்கள் வீடுகளில் சிறை வைக்கப்பட்டுள்ளோம், வீட்டில் பணிபுரியும் ஊழியர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பின்னர் நான் இன்னும் கோபமாகவும் கசப்பாகவும் இருப்பதை பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள் ”என்று அவர் மற்றொரு ட்வீட்டில் கூறினார். இதன் மூலம் உமர் தனது வீட்டு ஊழியர்களை கூட உள்ளே அனுமுதிப்பதில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
தற்போது அவரது ட்வீட்டுக்கு பதிலளித்த ஸ்ரீநகர் காவல்துறை, ” லெத்போரா பயங்கரவாத சம்பவத்தின் 2 வது ஆண்டு நினைவுதினமான இன்று, ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க பாதகமான உள்ளீடுகள் காரணமாக, வி.ஐ.பிக்கள் / பாதுகாக்கப்பட்ட நபர்கள் எந்த ஒரு சுற்றுப்பயணமும் திட்டமிட வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட அனைவருக்கும் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து, பி.டி.பி தலைவர் மெஹபூபா முப்தியும் கடந்த ஆண்டு டிசம்பரில் பரிம்போரா வட்டாரத்தில் நடந்த மோதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் மூன்று பயங்கரவாதிளில் ஒருவரான அதர் முஷ்டாக்கின் குடும்பத்தினரை சந்திக்க செல்வதாக கூறியதால்தான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் “போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் அதர் முஷ்டாக்கின் உடலை தரக்கோரிய அவரது தந்தை மீது யுஏபிஏ கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதன் மூலம் இயல்பான, காஷ்மீருக்கு வருகை தரும் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவிற்கு இந்த நிலையை, வெளிப்படுத்த விடும்புகிறோம் என்று அவர் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
source https://tamil.indianexpress.com/india/tamil-national-news-omar-abdullah-house-arrest-with-his-family-247435/