திங்கள், 15 பிப்ரவரி, 2021

பப்பாளி இலை, பப்பாளி ஜுஸ்… இவ்ளோ நன்மையா? எப்படி சாப்பிடுவது?

 பப்பாளி இலையின் பயன்கள்:

இந்த பப்பாளி இலை பல பருவநிலை மாற்றத்தின்போது வரும் நோய்களுக்கு மருந்தாக உள்ளது. சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதிலும் செரிமாணப் பிரச்னைகளை சீராக்குவதிலும், முடி வளர்ச்சியிலும், சரும ஆரோக்கியத்திலும் மருந்தாக அமைகிறது.

பருவகாலம் மாறும்போது வருகிற டெங்கு, சிக்குன் குனியா, டைஃபாய்டு போன்ற காய்ச்சல்களுக்கு பப்பாளி இலைதான் முக்கிய மருந்தாக இருக்கிறது. இந்த நோய்களுக்கு பிரதியேக ஊசி , மாத்திரைகள் இல்லை என்றாலும் பப்பாளி இலைகள்தான் அவற்றுக்கு முதன்மை மருத்துவமாக பலராலும் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

பப்பாளி இலையில் முற்றிலும் ஆண்டி ஆக்ஸிடண்ட் இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்ததில் குளுக்கோஸ் அளவை சீராக பராமரிக்க உதவுகிறது. மேலும், அது இன்சுலின் அளவை கட்டுப்படுத்துகிறது.

வாயு தொல்லை, வயிறு மந்தம், நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்னைகளுக்கு பப்பாளி இலை சிறந்தது. பப்பாளி இலையில் நார்ச்சத்து இருப்பதால் வயிறு பிரச்னை, செரிமாணப் பிரச்னைகளை சீராக்க உதவுகிறது. அதே போல, உடலில் ஏற்படும் தசைப் பிடிப்பு, மூட்டுவலி, போன்றவற்றிற்கும் பப்பாளி இலையை சாப்பிடலாம்.

பப்பாளி இலை சாறை தலை முடியின் வேரில் படும்படி தேய்த்தால் தலைமுடியின் வளர்ச்சி சீராக இருக்கும். பப்பாளி இலையில் பூஞ்சைகளை எதிர்க்கும் சக்தி இருப்பதால் பொடுகுத் தொல்லை இருந்தால் அதனைப் போக்க பப்பாளி இலை உதவியாக இருக்கும்.

பப்பாளி பழம் ஜூஸ் குடிப்பதால் சருமத்தில் பொலிவு அதிகரித்து காணப்படும். அதனால், பளபளப்பான சருமத்தைப் பெறுவீர்கள். பப்பாளி பழத்தில் பப்பைன் என்கிற வேதிப்பொருள் இருக்கிறது. இது டெட் செல்களை நீக்கி சருமத்தை பொலிவுடன் இருக்க வைக்கும். அதனால், பப்பாளி ஜூஸ் சாப்பிடலாம். ஆனால், கப்பினிகள் பப்பாளி பழத்தை தவிர்க்கலாம்.

இதையெல்லாவற்றையும் விட பப்பாளி இலை புற்றுநோயை தவிர்க்க பாரம்பரிய மருத்துவமாக கடைபிடிக்கப்படுகிறது என்பதுதான் ஹைலைட்டே. ஆனாலு, அதை ஆய்வுகள் எதுவும் உறுதி செய்யவில்லை. ஆனால், பப்பாளி இலை சாப்பிட்டு வருவதால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

இத்தனை சிறப்பு மிகு பப்பாளி இலை ஜூஸ் எப்படி இருந்தாலும் குடித்து ஆரோக்கியத்தைப் பேண வேண்டும் என்ற தோன்றுகிறதா? உங்களுக்காக பப்பாளி ஜூஸ் எப்படி தயாரிப்பது என்பதை இங்கே தருகிறோம்.

பப்பாளி இலை ஜூஸ் செய்வது எப்படி?

முதலில் பசுமையான பப்பாளி இலைகளையும் தண்ணீரையும் எடுத்துக்கொள்ளுங்கள். பின்னர், பப்பாளி இலைகளை பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். இதையடுத்து, நறுக்கிய பப்பாளி இலைகளை மிக்ஸியில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி மைய அரைத்து வடிகட்டிய பிறகு குடிக்க வேண்டும் அவ்வளவுதான்.

குறிப்பு: ஒருவேளை உங்களுக்கு டெங்கு போன்ற காய்ச்சல் இருப்பின் 100 மி.லி ஜூஸை மூன்றாக பிரித்து ஒரு நாள்ல் மூன்று வேளைகள் குடிக்கலாம். பப்பாளி இலை ஜூஸ் உங்களால் குடிக்க முடியாத அளவுக்கு கசப்பாக இருப்பதாக உணர்ந்தால், அதற்காக பப்பாளி இலை ஜூஸுடன் கொஞ்சம் உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து குடிக்கலாம்.