Surge in Covid cases: Centre writes to five states, Uddhav warns second wave at door : புதிய கொரோனா வைரஸின் பரவலை கண்காணிப்பது முதல் ஆர்.டி. – பி.சி.ஆர் சோதனைகளை அதிகரிப்பது வரை பல்வேறு முக்கிய யுக்திகளை பயன்படுத்தி கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு 5 மாநிலங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.
அரசு தரப்பு இந்தியன் எக்ஸ்பிரஸிடம், மத்திய அரசு நடமாடும் ஆர்.டி.- பி.சி.ஆர் சோதனைக் கூடங்களை அதிகரிக்க கேரள அரசிடம் பரிந்துரை செய்துள்ளது. அதே போன்று மகாராஷ்ட்ரா, பஞ்சாப், சத்தீஸ்கர், மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா நோய்தொற்றினை கருத்தில் கொண்டு கடிதம் எழுதியுள்ளது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமும் இந்த பட்டியலில் அடங்கும். அதிகாரிகள் அந்த பகுதிகளுக்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூறி கடிதம் எழுதியிருக்க கூடும்.
நம்முடைய்ய வாசலில் வந்து நிற்கிறது கொரோனா தொற்று இரண்டாம் அலை என்று மக்களிடம் பேசியுள்ளார் மகாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ் தாக்கரே. நாம் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் அல்லது மற்றொரு ஊரங்கிற்கு மார்ச் 1ம் தேதி முதல் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
அமராவதி, அகோலா, மற்றும் புல்தானா போன்ற விதர்பா பகுதிகளில் இருக்கும் மாவட்டங்களுக்கு செவ்வாய் காலை முதல் ஒரு வாரம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புனே நிர்வாகம் புதிய தடைகளை அறிவித்துள்ளது. இரவு நேர நடமாற்றம், கூட்டம் கூடுதல், உணவகங்கள் மற்றும் பார்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளும் கல்லூரிகளும் பிப்ரவரி 28ம் தேதி வரை மூடியே இருக்கும்.
ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளின் விகிதத்தை அதிகரிப்பதன் மூலம் சோதனையை மேம்படுத்துமாறு ஐந்து மாநிலங்களுக்கு மத்திய அரசு கூறியுள்ளது; அனைத்து எதிர்மறை ரேபிட் ஆன்டிஜென் சோதனை முடிவுகளும் கட்டாயமாக RT-PCR சோதனையால் பின்பற்றப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்தவும்; மாவட்டங்களில் கடுமையான கண்காணிப்பு மற்றும் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்துதல்; சோதனை மற்றும் மரபணு வரிசைமுறை மூலம் பிறழ்ந்த புதிய வகை கொரோனா வைரஸ்களை கண்டறியவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மகாராஷ்ட்ராவின் நிலைமை குறித்து அச்சம் தெரிவித்துள்ளது மத்திய அரசு. ஆர்.டி.பி.சி.ஆர். மூலமாக 75% சோதனைகள் மேற்கொள்ளப்பட்டாலும் கூட, இது தேசிய சராசரி விகிதமான 1.79%-த்தை அதிகமாக உள்ளது. நோய் தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்காணிக்கும் பணிகளை அரசு செய்யவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அகோலா, யாவத்மால், நாசிக், மும்பை புறநகர் பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கும் நபர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது இருப்பினும், நேர்மறை முடிவுகளை பெற்றிருக்கும் இருப்பினும் தனிமைப்படுத்தப்படவோ அல்லது கண்காணிக்கப்படவோ இல்லை.
தாக்கரே 20 நிமிட வெப்காஸ்ட்டில், மீண்டும் ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்கலாமா? இதற்கான பதிலை பெற நான் 8 நாட்கள் காத்திருக்கின்றேன். யாருக்கெல்லாம் ஊரடங்கு உத்தரவு வேண்டாமோ அவர்கள் அனைவரும் மாஸ்க் அணிவார்கள், சானிடைஸர்கள் பயன்படுத்துவார்கள் மற்றும் தனிநபர் இடைவெளிகளை பின்பற்றுவார்கள். யாருக்கு ஊரடங்கு தேவையோ அவர்கள் இதனை பின்பற்ற மாட்டார்கள் என்று கூறினார்.
மாஸ்க்குகள் அணிவது, தனி நபர் இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவற்றை உறுதி செய்ய மி ஜபதார் (நான் பொறுப்பு) என்ற பிரச்சாரத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக அவர் கூறினார்.
ரயில்களிலும் அலுவலகங்களிலும் கூட்டம் வருவதைத் தவிர்ப்பதற்காக அலுவலக நேரங்களில் மாற்றங்கள் செய்யுமாறு தாக்கரே தனியார் நிறுவனங்களை வலியுறுத்தினார், மேலும் அனைத்து அரசியல், மத மற்றும் சமூக ஊர்வலங்கள் மற்றும் போராட்டங்களுக்கு திங்கள்க் கிழமை முதல் தடை விதிப்பதாகவும் அறிவித்தார். முன்னதாக, என்சிபி தலைவரும் நீர்ப்பாசன அமைச்சருமான ஜெயந்த் பாட்டீலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபப்ட்டதை தொடர்ந்து என்சிபி மாநிலம் தழுவிய சுற்றுப்பயணத்தை நிறுத்தி வைத்தது.
கேரளாவில் கொரோனா தொற்று விகிதம் உயர துவங்கியது. 8.9%-ல் துவங்கி 13.9% ஆக அதிகரித்தது. மேலும் ஆர்டி-பிசிஆர் சோதனைகளும் குறைவாக இருப்பது கவலை அளித்தது. “மாநிலத்தில் சுமார் 70% சோதனைகள் விரைவான ஆன்டிஜென் சோதனைகள் தான். நாங்கள் ஐ.சி.எம்.ஆருடன் ஒருங்கிணைந்து சில மொபைல் ஆர்டி-பி.சி.ஆர் ஆய்வகங்களை கேரளாவில் உருவாக்கி வருகின்றோம், ”என்று அந்த அதிகாரி கூறினார்.
பஞ்சாபில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. பஞ்சாபில் நோய் தொற்று ஏற்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் 300 தான் என்றாலும் கூட, இறப்பு விகிதங்களில் 3ம் இடத்தில் உள்ளது. தினமும் 6000 பேருக்கு நோய் தொற்று ஏற்படும் கேரளத்தில் இறப்புகள் இரட்டை இலக்கத்தில் இருப்பது ஆச்சரியம் அளிக்கவில்லை. அதே நிலை தான் மகாராஷ்ட்ராவிலும் தொடர்கிறது. எஸ்.பி.எஸ். நகரில் மட்டும் ஒரு வாரத்தில் இரட்டிபாகியுள்ளது. பஞ்சாப் எதையும் சரியாக செய்யவில்லை. சோதனைகளை அதிகரியுங்கள், சர்வைலன்ஸ், காண்டாக்ட் ட்ரேசிங் மற்றும் நோயாளிகளை மருத்துவமனைகளில் அனுமதித்தல் என்று அவர்களிடம் கூறினோம் என்றார் அவர்.
சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலங்களில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அறிவிக்கப்பட்டுள்ளது. இரு மாநிலங்களின் விஷயத்தில் அவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் எந்த நேரத்திலும் அம்மாநிலங்களின் நிலைமை மோசம் அடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
source https://tamil.indianexpress.com/india/surge-in-covid-cases-centre-writes-to-five-states-uddhav-warns-second-wave-at-door-248770/