வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை நிரந்தரமாக நீக்குவதற்கான வழிகளைத் தேடுகிறீர்களா? ஆனால், சமூக ஊடக கணக்குகளை நீக்குவதற்கு முன்பு உங்கள் எல்லா தரவையும் முதலில் பதிவிறக்கம் செய்யுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம். உங்கள் தரவை எவ்வாறு பதிவிறக்கம் செய்யலாம், எவ்வளவு நேரம் எடுக்கும், எந்த தரவு கிடைக்கும் என்பதைப் பற்றி எல்லாவற்றையும் விரிவாக இங்கு விளக்கியுள்ளோம். உங்கள் கணக்கை நீக்கியதும், உங்கள் புகைப்படங்கள், வீடியோக்கள், அரட்டைகள் மற்றும் பிற கணக்குத் தரவுகள் அனைத்தும் தளங்களிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதை நினைவில் கொள்க. மேலும் அறிய தொடர்ந்து படிக்கவும்.
வாட்ஸ்அப் தரவை எவ்வாறு பதிவிறக்குவது?
உங்கள் வாட்ஸ்அப் கணக்கை நீக்குவதற்கு முன், உங்கள் எல்லா சாட்களையும் பேக் அப் எடுக்க விரும்பினால் உங்கள் எல்லா தரவையும் பதிவிறக்கம் செய்யலாம்.
ஸ்டெப் 1: உங்கள் தனிப்பட்ட வாட்ஸ்அப் சாட்களை நீங்கள் ஏற்றுமதி செய்யவேண்டும். இதற்காக நீங்கள் அமைப்புகள்> அரட்டைகள்> அரட்டை வரலாறு> ஏற்றுமதி அரட்டையைப் பார்வையிட வேண்டும்.
ஸ்டெப் 2: நீங்கள் ஏற்றுமதி செய்ய விரும்பும் அரட்டையைத் தேர்வுசெய்க.
ஸ்டெப் 3: நீங்கள் தனிப்பட்டவர்களுடன் பரிமாறிக்கொண்ட அனைத்து ஃபைல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பிற ஊடகங்களையும் சேர்க்க விரும்பினால் “மீடியாவைச் சேர்” என்பதை க்ளிக் செய்யவும்.
ஸ்டெப் 4: நீங்கள் சாட்டை ஏற்றுமதி செய்ய விரும்பும் பயன்பாட்டைத் தேர்வுசெய்க. அதற்கு கூகுள் டிரைவ் மற்றும் ஜிமெயில் போன்ற பயன்பாடுகளை வாட்ஸ்அப் காட்டும்.
வாட்ஸ்அப் கணக்கை நீக்குவது எப்படி?
ஸ்டெப் 1: வாட்ஸ்அப்பைத் திறந்து மூன்று புள்ளிகள் கொண்ட ஐகானை க்ளிக் செய்யவும்.
ஸ்டெப் 2: அமைப்புகள்> கணக்கு பிரிவு> எனது கணக்கை நீக்கு.
ஸ்டெப் 3: நீங்கள் உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு எனது கணக்கை நீக்கு என்பதை க்ளிக் செய்ய வேண்டும். உங்கள் கணக்கை ஏன் நீக்க விரும்புகிறீர்கள் என்பதற்கான காரணத்தைத் தேர்ந்தெடுக்க வாட்ஸ்அப் கேட்கும்.
ஸ்டெப் 4: காரணத்தைத் தேர்ந்தெடுத்ததும், நீங்கள் செய்ய வேண்டியது எனது கணக்கை நீக்கு என்பதை க்ளிக் செய்வதுதான்.
அனைத்து ஃபேஸ்புக் தரவையும் பதிவிறக்குவது எப்படி?
ஃபேஸ்புக் கணக்கை நீக்குவதற்கு முன்பு உங்கள் எல்லா ஃபேஸ்புக் தரவுகளையும் பதிவிறக்கம் செய்யலாம். தரவுக்காக நீங்கள் ஃபேஸ்புக்கிற்கு ஒரு கோரிக்கையை அனுப்பினால், அது உங்களுக்கு ஒரு இணைப்பை மின்னஞ்சல் செய்யும். சமூக ஊடக மேடையில் நீங்கள் பகிர்ந்த பதிவுகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இதில் அடங்கும். ஃபேஸ்புக்கில் நீங்கள் பகிர்ந்த அனைத்து செய்திகளும் அல்லது அரட்டை உரையாடல்களும் கிடைக்கும். நிறுவனம் உங்கள் தொடர்பு தகவல், நிகழ்வுகள், காலவரிசை மற்றும் பிற விவரங்களையும் வழங்குகிறது.
ஸ்டெப் 1: உங்கள் ஃபேஸ்புக் தரவின் பதிவிறக்க இணைப்பைப் பெற, அமைப்புகள் மற்றும் தனியுரிமை பிரிவுக்குச் செல்லுங்கள். இது ஹாம்பர்கர் மெனுவில் மறைக்கப்பட்டுள்ளது.
ஸ்டெப் 2: அமைப்புகளை க்ளிக் செய்யவும் > கீழே ஸ்க்ரோல் செய்து, “உங்கள் தகவலைப் பதிவிறக்கு” என்பதை க்ளிக் செய்யவும். (ஃபேஸ்புக் தகவல் பிரிவில் இந்த விருப்பத்தை நீங்கள் காண்பீர்கள்.)
ஸ்டெப் 3: ஃபேஸ்புக்கிலிருந்து நீங்கள் விரும்பும் அனைத்து தகவல்களையும் தேர்ந்தெடுக்கவும் அல்லது தேர்வுநீக்கவும் மற்றும் உருவாக்கு ஃபைல் ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும். இந்த நிறுவனம் உங்கள் தரவிற்கான பதிவிறக்க இணைப்பை உங்களுக்கு அனுப்பும். பதிவிறக்கும் நேரம் நீங்கள் எவ்வளவு தரவை உருவாக்கியுள்ளீர்கள் என்பதைப் பொறுத்தது. அதற்கு 15 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் ஆகலாம். மேலே குறிப்பிட்டுள்ளபடி, அதன் இணைப்பு மின்னஞ்சல் வழியாக கிடைக்கும்.
ஃபேஸ்புக் கணக்கை நீக்குவது எப்படி?
ஸ்டெப் 1: உங்கள் தொலைபேசியில் ஃபேஸ்புக் பயன்பாட்டைத் திறந்து அமைப்புகள் & தனியுரிமை> அமைப்புகளுக்குச் செல்லவும்.
ஸ்டெப் 2: தேடல் பட்டியில், செயலிழக்க என்று தட்டச்சு செய்து தேடல் பட்டனை க்ளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: “கணக்கு உரிமை மற்றும் கட்டுப்பாடு” விருப்பத்தை இப்போது நீங்கள் பெறுவீர்கள். அதை க்ளிக் செய்யவும்.
ஸ்டெப் 4: செயலிழக்க மற்றும் நீக்கு என்பதை க்ளிக் செய்து> கணக்கை நிரந்தரமாக நீக்க கணக்கை நீக்கு என்பதைத் தேர்வுசெய்க. தேர்வு செய்த பிறகு, “கணக்கு நீக்குதலுக்குத் தொடரவும்” என்பதைக் கிளிக் செய்க.
அனைத்து இன்ஸ்டாகிராம் தரவையும் பதிவிறக்குவது எப்படி?
ஃபேஸ்புக்கைப் போலவே, இன்ஸ்டாகிராமும் உங்கள் எல்லா தரவையும் பதிவிறக்க அனுமதிக்கிறது. பதிவிறக்க இணைப்பை நீங்கள் கேட்டவுடன், நீங்கள் பகிர்ந்த அனைத்து புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் கதைகளின் ஃபைல்களை உருவாக்கி, அந்த இணைப்பை உங்களுக்கு மின்னஞ்சல் செய்கிறது. இந்த செயல்முறைக்கு 48 மணிநேரம் வரை ஆகலாம். எனவே, நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்று இன்ஸ்டாகிராம் கூறுகிறது.
ஸ்டெப் 1: உங்கள் தொலைபேசியில் இன்ஸ்டாகிராமைத் திறந்து, ஹாம்பர்கர் மெனுவில் தட்டுவதன் மூலம் அமைப்புகளுக்குச் செல்லவும்.
ஸ்டெப் 2: பாதுகாப்பு> தரவைப் பதிவிறக்கு> உங்கள் மின்னஞ்சல் ஐடியை உள்ளிடவும்.
ஸ்டெப் 3: கோரிக்கை பதிவிறக்கத்தை க்ளிக் செய்யவும். உங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதற்கு முன் உங்கள் கடவுச்சொல்லை உள்ளிடுமாறு இன்ஸ்டாகிராம் கேட்கும்.
இன்ஸ்டாகிராம் கணக்கை நீக்குவது எப்படி?
ஸ்டெப் 1: இன்ஸ்டாகிராமின் மொபைல் பதிப்பில் எனது கணக்கை நீக்கு விருப்பத்தை இன்னும் பெறவில்லை. அதனால், கணக்கு நீக்கு பக்கத்தில் நேரடியாக செல்ல ‘இந்த இன்ஸ்டாகிராம் தளத்திற்குச் செல்லவும்’.
ஸ்டெப் 2: வெப்பில் நீங்கள் இன்ஸ்டாகிராமில் உள்நுழையவில்லை என்றால், முதலில் உள்நுழையுமாறு கேட்கப்படுவீர்கள்.
ஸ்டெப் 3: கீழ்தோன்றும் மெனுவிலிருந்து ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும் உங்கள் கணக்கை ஏன் நீக்குகிறீர்கள்? மற்றும் உங்கள் கடவுச்சொல்லை மீண்டும் உள்ளிடவும். உங்கள் கணக்கை நிரந்தரமாக நீக்குவதற்கான விருப்பம் நீங்கள் மெனுவிலிருந்து ஒரு காரணத்தைத் தேர்ந்தெடுத்த பின்னரே தோன்றும்.
ஸ்டெப் 4: எனது கணக்கை நிரந்தரமாக நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
source : IndianExpress.com News