செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

கார்பன் வாட்ச் : இந்தியாவில் கார்பன் தடத்தை அறிய உதவும் முதல் செயலி!

 ஒரு தனிநபரின் கார்பன் தடம் மதிப்பிடுவதற்கான மொபைல் பயன்பாடான கார்பன் வாட்சை அறிமுகப்படுத்திய இந்தியாவின் முதல் மாநிலம் அல்லது யூனியன் பிரதேசமாக தற்போது சண்டிகர் உள்ளது. அந்த செயலியை எல்லோரும் அணுக முடியும் என்றாலும், சண்டிகரில் வசிப்பவர்களுக்கு ஒரு விரிவான ஆய்வைத் தொகுக்க சில வசதிகள் அந்த செயலியில் உருவாக்கித் தரப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்ட் இயங்கு தளங்களில் செயல்படும் செல்போன்களில் க்யூ.ஆர். கோடினை பயன்படுத்தி நீங்கள் இந்த செயலியை நீங்கள் டவுன்லோடு செய்து கொள்ளலாம். கார்பன் டை ஆக்ஸ்டைடு உள்ளிட்ட பசுமை வாயுக்கள் மனித செயல்பாடுகள் மூலம் வளிமண்டலத்தை அடைவதை நாம் கார்பன் தடம் அல்லது கார்பன் ஃபுட்ப்ரிண்ட் என்று அழைக்கின்றோம். இந்த செயலியின் வடிவமைப்பு, செயல்பாடு மற்றும் சண்டிகரில் கார்பன் வெளியீடு ஆகியவை குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிந்து கொண்டது.

இந்த செயலி எவ்வாறு இயங்குகிறது?

ஒருவர் இந்த செயலியை  பதிவிறக்கம் செய்த பிறகு, அதில் கேட்கப்பட்டிருக்கும் நான்கு முக்கியமான பிரிவுகளுக்கு உள்ளீட்டினை வழங்கவேண்டும். நீர், ஆற்றல், கழிவு உருவாக்கம் மற்றும் போக்குவரத்து (வாகன இயக்கம்) ஆகிய நான்கு நான்கு  பிரிவுகளில்  தங்களின் தனிப்பட்ட விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். நீர் பிரிவில் தனி நபரின் நீர் பயன்பாடு குறித்து அறிவிக்க வேண்டும்.

ஆற்றல்  (Energy) பிரிவில் ஒவ்வொரு மாதமும் வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சார அலகுகள், மாதாந்திர பில் போன்றவை குறித்தும் சோலார் எரிசக்தியின் பயன்பாடு குறித்த விவரங்களையும் வழங்க வேண்டும்.

கழிவு உருவாக்கம் பகுதியில் தனிநபர் தங்கள் பங்கில் உள்ள கழிவு உற்பத்தியைப் பற்றியும் அவர்களின் குடும்பத்தைப் பற்றியும் தெரிவிக்க வேண்டும். போக்குவரத்து பிரிவில்,நான்கு சக்கர வாகனம், இரு சக்கர வாகனம் அல்லது சைக்கிள் என தனிநபர் பயன்படுத்தும் போக்குவரத்து முறை பற்றி தெரிவிக்க வேண்டும்.

உள்ளீடாக கொடுத்த தகவல்களின் அடிப்படையில் இந்த செயலி ஒரு தனி நபரின் கார்பன் தடம் குறித்து கணக்கிடும். இந்த செயலி நாடு மற்றும் உலக கார்பன் தட சராசரி தகவல்களையும் தனிநபரின் கார்பன் உமிழ்வு பங்களிப்பு குறித்த தகவல்களையும் வழங்கும்.

இந்த செயலியை உருவாக்க காரணம் என்ன?

இது மக்களை க்ளைமேட் ஸ்மார்ட் சிட்டிசன்களாக மாற்றுவதோடு மட்டும் அல்லாமல் அவர்களின் தனி நபர் கார்பன் தடங்கள் குறித்து அறிந்து கொள்ளவும் வழிவகை செய்கிறது. மேலும் இதனை எவ்வாறாக குறைப்பது என்பது தொடர்பாக ஆலோசனையை வழங்குவது தான் இந்த செயலிக்கு பின்னால் இருக்கும் காரணம் என்று தெபேந்திர தாலியா, யு.டி. சுற்றுச்சூழல் துறையின் இயக்குநர் கூறினார்.

”இந்த செயலியை யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். மும்பையில் வசிக்கும் ஒருவர் கூட அதனை பதிவிறக்கம் செய்யலாம். அவருடைய கார்பன் தடம் குறித்த தகவல்கள் அவருக்கு வழங்கப்படும். ஆனால் சண்டிகரில் வசிக்கும் மக்களின் பயன்பாடு குறித்து மட்டுமே எங்களின் நோக்கம் இருக்கிறது என்று அவர் கூறினார். இதன் மூலம் எங்களால் சண்டிகரின் சராசரி கார்பன் உமிழ்வினை மதிப்பாய்வு செய்ய முடியும். இரண்டு விருப்பங்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளது. ஒன்று சண்டிகருக்கு உள்ளே மற்றொன்று சண்டிகருக்கு வெளியே. தனி நபர்கள் தங்களின் பின் கோட்டினை அந்த செயலியில் உள்ளீடாக தர வேண்டும்.

இந்த செல்போன் செயலியால் என்ன தீர்வுகள் எட்டப்படும்? இந்த செயலி தினமும் முறையாக அப்டேட் செய்யப்படுமா?

இந்த மொபைல் செயலி கார்பன் தடங்களை குறைப்பதற்கான வழிமுறைகளை பரிந்துரைக்கும். தனிநபர்கள் வழங்கிய தகவல்களின்படி அவர்களுக்கு பயன்பாடு வழி முறைகளை பரிந்துரை செய்யும்.  உதாரணமாக, ஒரு நபர் தன்னுடைய பயண பயன்பாட்டிற்காக நான்கு சக்கர வாகனத்தை மட்டுமே வைத்திருப்பதாக கொள்வோம். அது குறித்த தகவலை மட்டுமே அவர் உள்ளீடாக கொடுத்திருந்தால், அடிக்கடி சைக்கிளை பயன்படுத்தும் படி அந்த செயலி வற்புறுத்தும். மேலும், எனர்ஜி விருப்பத்தில், சூரிய சக்தியின் பயன்பாடு குறித்து தனிநபர்களுக்கு இந்த செயலி தெரிவிக்கும்.

தனிநபர்களின் செயல்களில் கவனம் செலுத்துகிறது மற்றும் போக்குவரத்து, எரிசக்தி, கழிவு மற்றும் நீர் நுகர்வு அடிப்படையில் கார்பன் தடம் கணக்கிடுகிறது. இதற்கு மாற்று திட்டங்கள் என்ன என்பது குறித்தும், அவர்கள் வாழ்க்கை முறையால் ஏற்படும் கார்பன் உமிழ்வுகள் குறித்தும் அறிவிக்கும். இந்த சாத்தியமான எதிர்விளைவுகள் மூலம் கார்பன் உமிழ்வை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம்.

பதிவிறக்கம் செய்வது எப்படி?

.https: //play.google.com/ store/apps/details?id=com.carboneye. என்ற சுட்டியில் இந்த செயலியை நீங்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் ch-env@nic.in என்ற மின்னஞ்சலுக்கு உங்களின் பின்னூட்டங்கள், கருத்துகள் மற்றும் பரிந்துரைகளையும் அவர்களுக்கு அனுப்பலாம்.

எமிஷன் ஜெனரேசன் பார்வையில் சண்டிகரின் நிலை என்ன?

சண்டிகர் பசூமை நகரங்களில் ஒன்றாகும். இது 33 சதவீத இலக்குக்கு பதிலாக 45 சதவீத பசுமை மறைப்பை கொண்டுள்ளது. காற்றின் தர நிர்ணயத்திற்கான தரங்களை பூர்த்தி செய்யாத காரணத்தால் நான் அட்டெய்மெண்ட் நகரங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

எங்கள் மதிப்பீட்டின் படி, வாகனங்களில் இருந்து வெளியேறும் மாசுபாடு மற்றும் அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா மற்றும் ஹிமாச்சல் பிரசதேசத்தில் இருந்து வெளியேற்றப்படும் எமிஷன் போன்றவை தான் சண்டிகரின் காற்று தரத்தினை நிர்ணயம் செய்கிறது. சண்டிகரில் மிகப்பெரிய தொழிற்சாலைகள் ஏதும் இல்லை என்று தேபேந்திர தலாய் கூறினார்.  சண்டிகரில் 1000 நபர்களுக்கு 878 நபர்களிடம் வாகனங்கள் உள்ளன. மொத்தமாக 11 லட்சம் மக்கள் தொகையை பெற்றுள்ளது இந்த பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் கூட்டுத்தலைநகரான சண்டிகர்.

source https://tamil.indianexpress.com/explained/what-is-carbon-watch-indias-first-app-to-assess-ones-carbon-footprint-248817/