வியாழன், 18 பிப்ரவரி, 2021

ஜாட் மெஜாரிட்டியான 40 தொகுதிகள்: வேளாண் சட்டங்களால் பாஜக அச்சம்?

 BJP top brass in huddle over farm protest fallout in 40 LS seats in Jat belt :  ஜாட் பெல்ட் முழுவதும் பரவியுள்ளது விவசாயிகள் போராட்டம். இந்நிலையில் பாஜக செவ்வாய் கிழமை அன்று ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் மேற்கு உத்திரபிரதேச பகுதிகளில் இருக்கும் தலைவர்களுடன் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. ஜே.பி. நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர்கள் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஆகியோரை சந்தித்தனர். கரும்பு விவசாயத்தில் அதிகம் ஈடுபட்டிருக்கும் விவசாய தலைவர்கள் மகாபஞ்சாயத்து நடத்துவதற்கு எதிராக இவர்கள் உள்ளனர்.


இந்த கூட்டத்தில் மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மற்றும் விவசாயத்துறை இணை அமைச்சரான, ஜாட் சமூகத்தை சேர்ந்த சஞ்சீவ் பல்யானும் கலந்து கொண்டனர். அமித் ஷா இந்த மூன்று விவசாய சட்டங்களால் ஏற்பட இருக்கும் அனைத்து நன்மைகளையும் பிரச்சாரம் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும், விவசாயிகளை தவறான முறையில் வழிநடத்தும் நபர்களுக்கு மக்களுக்கு சரியான பதில் அளிப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டதாக வட்டாரங்கள் அறிவிக்கின்றன.

 

 

தற்போது களநிலவரத்தின் மதிப்பீட்டினை மாநில தலைவர்கள் பாஜக தலைமைக்கு எடுத்துக் கூறியுள்ளனர். மேலும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் போது, அரசு தரப்பில் இருந்து எந்த விதமான தீர்வை நோக்கிய முன்னெடுப்புகளும் இல்லாமல் இருப்பது கவலை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.  மூத்த தலைவர்கள், இது போன்ற போராட்டங்கள் ஜாட் சமூகத்தின் மத்தியில் ஏற்படும் பட்சத்தில் அது இங்கிருக்கும் 40 தொகுதிகளை பாதிக்கும். மேலும் கட்சி இந்த போராட்டம் பரவாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதாக கூறியுள்ளனர்.

”இடதுசாரிகளின் தொழில்முறை கிளர்ச்சியாளர்கள்” இது போன்ற ஆர்ப்பாட்டங்களைத் திட்டமிடுகிறார்கள் என்றும் அவர்கள் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டும் என்றும் கூறியதாகக் கூறப்படுகிறது.  உத்தரபிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் உள்ள அனைத்து காப் தலைவர்களுடனும், பாஜக பிரிவுகளின் அலுவலர்களுடனும் தொடர்பு கொள்ளுமாறு உள்ளூர் தலைவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதை உறுதிப்படுத்த “உத்திகளை” தயாரிக்குமாறு பாஜக தலைவர் ஒருவர் கேட்டுக் கொண்டார்.

ஜனவரி 27ம் தேதி அன்று காஸிப்பூர் பகுதியில் இருந்து போராட்டக்காரர்கள் முகாம்களை காலி செய்ய வேண்டும் என்று உ.பி. அரசு கேட்டுக் கொண்ட போது, பி.கே.யு தலைவர் ராகேஷ் திகேத்தின் உணர்வுப்பூர்வமான வேண்டுகோளுக்கு பிறகு மூன்று மாத போராட்டம் மேற்கு உ.பியின் கரும்பு விவசாயிகளிடம் பரவியது.

சமீபத்திய ஆண்டுகளில் பாஜக ஜாட் சமூகத்தினரிடையே குறிப்பிடத்தக்க தாக்கத்தினை உருவாக்கியுள்ளது. இவை குறிப்பாக அஜித் சிங் தலைமை வகிக்கும் ஆர்.எல்.டி கட்சியின் புகழ் குறைந்து வருவதாலும், ஜாட் மற்றும் இஸ்லாமியர்கள் இடையே பிளவு ஏற்பட்டு வருதாலும் பாஜக ஜாட் சமூகத்தில் நுழைந்துள்ளது. ஆர்.எல்.டி தலைவரும் அஜீத் சிங்கின் மகனுமான ஜெயந்த் சௌத்ரி போராட்ட பேரணிகளை நடத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அரசு விவசாயிகளிடம் பேச தயாராக உள்ளது என்று கூறியுள்ளது. இருப்பினும் மற்ற தரப்பு தங்களின் கருத்துகளோடு முன் வர வேண்டும் என்று மூத்த மத்திய அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.

இதுவரை வழங்கிய திருத்தங்களை உள்ளடக்கிய ஒரு மசோதாவை அரசாங்கம் கொண்டு வருமா என்று கேட்டதற்கு, “அரசாங்கம் நேர்மையாக பேச, விரிவாக பேச விரும்புகிறது. விவசாயிகள் தங்களுக்கு சந்தேகம் அல்லது சந்தேகம் உள்ள பிரச்சினைகளை முன்னிலைப்படுத்த முடிந்தால், நாங்கள் விவாதிக்க தயாராக இருக்கிறோம். இது விவசாயிகளை எங்கு பாதிக்கிறது என்பதை அவர்கள் எங்களிடம் சொல்ல வேண்டும்” என்று அவர் கூறினார்.

source https://tamil.indianexpress.com/india/bjp-top-brass-in-huddle-over-farm-protest-fallout-in-40-ls-seats-in-jat-belt-247929/