சட்டம் என்ன கூறுகிறது?
1973ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி இயற்றப்பட்ட இச்சட்டம் தேசிய கொடி, இந்திய அரசியலமைப்பு, தேசிய கீதம் இந்திய வரைபடம் போன்ற தேசிய சின்னங்களை இழிவுபடுத்துவதையோ அல்லது அவமதிப்பதையோ தண்டிக்கிறது.
சட்டப் பிரிவு 2-ன் கீழ், “பொது இடத்திலோ அல்லது வேறு எந்த இடத்திலோ தேசியக் கொடியினை கிழித்தல், எரித்தல், அவமதித்தல், சிதைத்தல், அழித்தல், மிதித்தல் அல்லது பேச்சால், எழுத்தால், செயல்களால் தேசியக் கொடியையும், அரசியலமைப்பு சாசனத்தையும் அவமதிப்பு செய்வோருக்கு 3 ஆண்டு காலம் வரையிலான சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டது.
சட்டத்தின்படி, ” அரசு தகனம், இராணுவத்தினர் அல்லது துணை இராணுவப் படைகளின் இறுதிச் சடங்குகளைத் தவிர வேறு எந்த வடிவத்திலும் தேசியக் கொடி போர்த்தப்படுவதும் இந்திய தேசியக் கொடியை அவமதிப்பதாக பொருள் கொள்ளப்படுகிறது (பிரிவு 2 விளக்கம் 4 (ஈ)
தேசியக் கொடியை கையாள்வது குறித்து கொண்டுவரப்பட்ட இந்தியாவின் கொடி விதிமுறை, 2002 பிரிவு 3.22-ன் கீழ், “அரசு /ராணுவம்/துணை ராணுவப் படைகளின் இறுதிச் சடங்குகளைத் தவிர வேறு எந்த வடிவத்திலும் தேசியக் கோடி துணிமணியாகப் பயன்படுத்தப்படாது” என்று தெரிவிக்கின்றன.
அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ஒருவர் கூறுகையில், ” அரசு மரியாதையுடன் செய்யும் இறுதிச் சடங்குக்கு மட்டுமே தேசியக் கொடியை பயன்படுத்தப்படும்” என்று தெரிவித்தார்.
” காவல்துறை மற்றும் ஆயுதப்படைகளைத் தவிர, பதவிகளை வகித்த அல்லது பதவியில் உள்ள ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர், முதலமைச்சர் மரணமடையும் போது அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகள் நடத்தப்படுகின்றன. மேற்கூறிய வகைகளைச் சேராத ஒருவர் மரணமடைந்தால் அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறும் என்று அம்மாநில அரசு தெரிவிக்கவேண்டும். அப்போது, அவர்கள் மீது தேசியக் கொடியை போர்த்தமுடியும்,”என்று தெரிவித்தார்.
இறுதியாக, இந்தியாவின் மிகச் சிறந்த விஞ்ஞானி பத்ம விபூஷன் விருது பெற்ற விஞ்ஞானி ரோத்தம் நரசிம்மா இறுதி சடங்கு அரசு மரியதையுடன் நடைபெற்றது. அதற்கு முன்னதாக,திரைப்பட நடிகர்கள் ஸ்ரீதேவி, சஷி கபூர் ஆகியோர் அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டனர்.
source :https://tamil.indianexpress.com/explained/what-prevention-of-insults-to-national-honour-act-says-about-draping-tricolour-over-body-of-a-deceased-246204/