Top quotes from Disha Ravi’s bail order : 22 வயதான காலநிலை செயற்பாட்டாளர் திஷா ரவி விவசாயிகள் போராட்டம் தொடர்பான டூல்கிட் விவகாரத்தில் தொடர்புடையதாக கூறி கைது செய்யப்பட்டார். அந்த டூல் கிட் ஸ்வீடனை சேர்ந்த செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்க் தன்னுடைய டிவ்ட்டர் பக்கத்தில் பதிவிட்ட நிலையில் திஷா கைது செய்யப்பட்டார். பின்பு அவருக்கு டெல்லி நீதிமன்ற்றம் செவ்வாய்க் கிழமை அன்று ஜாமீன் வழங்கியது. ஆவணம் ஒன்றை உருவாக்கி பரப்பிய காரணத்தால் அவர் முக்கியமான சதிகாரர் என்றும், காலிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கும் பொயட்டிக் ஜெஸ்டிஸ் ஃபவுண்டேசன் அமைப்புடன் இணைந்து இந்திய அரசுக்கு எதிரான மனநிலையை உருவாக்க முயன்றார் என்று கூறப்பட்ட காவல்துறையின் புகாருக்கு எதிராக அமைந்தது நீதிமன்றத்தின் உத்தரவு.
பதில் கிடைக்கக் கூடிய குறைவான தெளிவான ஆதாரங்களைக் கொண்டு, 22 வயது பெண்ணிற்கு ஜாமீன் வழங்குவதற்கு எதிராக தெளிவான காரணங்கள் ஏதும் இருப்பதை நான் காணவில்லை. முற்றிலும் இதற்கு முன்பு எந்த விதமான குற்றப்பின்னணியும் இல்லாமல், சமூகத்தின் வேரில் இருந்து வந்திருக்கும் இவரை ஜெயிலுக்கு அனுப்பவதற்கான காரணங்கள் எதையும் நான் காணவில்லை.
எந்த ஒரு குடியரசு நாட்டிலும் அரசின் மனசாட்சியை கொண்டிருப்பவர்காள் பொதுமக்கள். அரசின் கொள்கைகளுக்கு ஏற்றுக்கொள்ள மறுப்பதற்காக அவர்களை சிறைக்கு அனுப்ப முடியாது. அரசின் பெருமைகளுக்கு காயம் ஏற்படுத்திய காரணத்திற்காக அமைச்சர் மீது தேசத்துரோக குற்றத்தை பயன்படுத்த முடியாது.
அனுமானங்களின் அடிப்படையில் ஒரு குடிமகனின் சுதந்திரத்தை விசாரணை முகமைகள் தடுப்பதை இனியும் அனுமதிக்க முடியாது.
கருத்து வேறுபாட்டிற்கான மரியாதை அடிக்கோடிட்டு காட்ட நீதிமன்றம் ரிக் வேதத்தில் இருந்து ஒரு சொற்றொடரை மேற்கோள்காட்டியது. 5000 ஆண்டுகால பழமையான நம்முடைய நாகரீகம் மாறுபட்ட கருத்துகளை எப்போதும் வெறுக்கவில்லை என்று கூறியது.
பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை மீறமுடியாத அடிப்படை உரிமையாக அங்கீகரிப்பதன் மூலம் கருத்து வேறுபாட்டிற்கு உரிய மரியாதை செலுத்தினர். கருத்து வேறுபாடுக்கான உரிமை இந்திய அரசியலமைப்பின் 19 வது பிரிவின் கீழ் உறுதியாக உள்ளது.
பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் என்பது உலகளாவிய ஆதரவுகளை தேடும் உரிமையையும் உள்ளடக்கியது. தகவல்தொடர்புக்கு புவியியல் தடைகள் எதுவும் இல்லை. சட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இது அனுமதிக்கப்படும் வரை, வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு அணுகல் இருக்கும் வரை, ஒரு குடிமகனுக்கு தகவல்தொடர்பு வழங்குவதற்கும் பெறுவதற்கும் சிறந்த வழிகளைப் பயன்படுத்துவதற்கான அடிப்படை உரிமை உண்டு.
புகாரில் கூறப்பட்ட டூல் கிட் அல்லது பி.ஜே.எஃப். உடனான தொடர்பு ஆட்சேபனைக்கு உள்ளாகதாதல், வாட்ஸ்ஆப் சாட்டினை டெலிட் செய்தல் மற்றும் டூல்கிட் உடனான அவருடைய தொடர்பினை அழித்தலும் அர்த்தமற்றதாகிறது.
விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது என்பதையும், மேலும் ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் காவல்துறையினர் இருக்கிறார்கள் என்பதையும் நான் அறிகிறேன். இதுவரை சேகரிக்கப்பட்ட பொருட்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட விண்ணப்பதாரரைக் கைது செய்ய புலனாய்வு நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஒரு குடிமகனின் சுதந்திரத்தை மேலும் எதிர்பார்ப்புகளின் அடிப்படையில் கட்டுப்படுத்த அவர்களை அனுமதிக்க முடியாது.
மேலும், 2021 ஜனவரி 26 அன்று வன்முறையைத் தூண்டுவதற்கு விண்ணப்பதாரர் / குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் மேற்கூறிய அமைப்புகள் மற்றும் அதன் கூட்டாளிகள் ஆகியோரின் எந்தவொரு அழைப்பும், தூண்டுதலும், தூண்டுதலும் அல்லது அறிவுறுத்தலும் இருந்ததாகக் கூற எதுவும் பதிவு செய்யப்படவில்லை.