வியாழன், 20 மே, 2021

கொரோனா தொற்று: 200 மாவட்டங்களில் குறைந்த புதிய தொற்று எண்ணிக்கை

கொரோனா தொற்று: 200 மாவட்டங்களில் குறைந்த புதிய தொற்று எண்ணிக்கை

 18/5/2021 Covid-19 positivity declines, new cases down in 200 districts : கடந்த 13 வாரங்களாக, 200 மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தற்போது கடந்த இரண்டு வாரமாக குறைய துவங்கியுள்ளது. நாட்டின் மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் கடந்த 7 நாட்களில் குறைந்துள்ளது என்று அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

தொற்றின் வளைவு சீராக உள்ளது. மேலும் இனப்பெருக்க எண் (R) தற்போது 1க்கும் கீழே வந்துள்ளது என்று கொரோனா டாஸ்க் ஃபோர்ஸின் தலைவர் மருத்துவர் வி.கே. பால் தெரிவித்துள்ளார். இதன் பொருள் தொற்றுநோய் ஒட்டுமொத்தமாக சுருங்கி வருகிறது என்பதாகும்.

சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தரவுகள் படி, நாள் ஒன்றுக்கு மே 11 முதல் 17 வரை 18.45 லட்சம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது என்றும், அதில் 16.9% நேர்மறை முடிவுகளை காட்டியது என்றும் கூறப்படுகிறது.

பிப்ரவரி 16-22 க்குப் பிறகு இந்த ஏழு நாட்களில் தான் நேர்மறை விகிதத்தில் சரிவு ஏற்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. பல மாநிலங்களில், விரிவான முயற்சி,, கட்டுப்பாடுகள் மற்றும் சோதனை காரணமாக தொற்று வளைவு குறைகிறது என்று பால் கூறினார். இருப்பினும் தமிழகம், ஆந்திரா, மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்களின் நிலை கவலை அளிப்பதாக அவர் கூறினார்.

விஞ்ஞான பகுப்பாய்விலிருந்து நமக்குத் தெரிந்த விஷயம் என்னவென்றால், இனப்பெருக்கம் எண் இப்போது ஒட்டுமொத்தமாக 1 க்குக் கீழே உள்ளது. அதாவது தொற்றுநோய் ஒட்டுமொத்தமாக சுருங்கி வருகிறது. வீட்டில் தனிமைப்படுத்துதல் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் மட்டும் அல்லாமல் மிகப்பெரிய, விரிவான கட்டுப்பாட்டு முயற்சி காரணமாக அது நிகழ்ந்துள்ளது என்று பால் கூறினார்.

இனப்பெருக்கம் எண் என்பது ஏற்கனவே பாதிக்கப்பட்ட நபர் சராசரியாக பாதிக்கக்கூடிய நபர்களின் மதிப்பிடப்பட்ட எண்ணிக்கையாகும். ஆர்-மதிப்பு 1 க்குக் கீழே விழும்போது, ​​இது பொதுவாக தொற்றுநோய் உச்சத்தை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது.

Covid-19 positivity declines new cases down in 200 districts

இவை ஆரம்ப அறிகுறிகள் என்று பால் அடிக்கோடிட்டுக் காட்டினார் – மேலும் கட்டுப்படுத்துதல் மற்றும் சோதனை செய்வதில் எந்தவிதமான மனநிறைவும் புதுப்பிக்கப்பட்ட எழுச்சிக்கு வழிவகுக்கும் என்ற அவர், தற்போது நாம் அடைந்திருக்கும் தொற்று பரவல் குறைவு முடிவுகள் நாம் என்ன செய்தோம் என்பதால் தான். அந்த நடவடிக்கைகளை இனி குறைக்க முடியாது என்றும் இதனை கைமீறி சென்றுவிட வாய்ப்பு அளிக்க கூடாது என்றும் அவர் கூறினார்.

ஏப்ரல் 13 மற்றும் 19 தேதிகளில் இந்தியாவில் 15.25 லட்சம் சோதனைகள் நாள் ஒன்றுக்கு மேற்கொள்ளப்பட்டது. நேர்மறை விகிதம் அப்போது 16.9% ஆக இருந்தது. பிறகு ஏப்ரல் 20 – 26 தேதிகளில் நாள் ஒன்றுக்கு 16.95 லட்சம் சோதனைகள் மேற்கொள்ளபப்ட்டன. நேர்மறை முடிவுகள் 20.3% ஆக இருந்தது. ஏப்ரல் 27 – மே 3 வரையான காலகட்டத்தில் 18.13 லட்சம் நபர்களுக்கு நாள் ஒன்றுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 21.3% நேர்மறை முடிவுகள் வந்தன. மே 4 முதல் 10 வரையான காலகட்டத்தில் 21.4% நேர்மறை, சோதனை செய்யப்பட்ட 18.16 லட்சம் நபர்களிடம் உறுதி செய்யப்பட்டது. மே 11 முதல் 17 வரையில் 18.45 லட்சம் நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் 16.9% நேர்மறை பதிவாகியுள்ளது.

கடந்த வாரத்தில் 15 சதவீதத்திற்கும் அதிகமான வழக்கு நேர்மறையை அறிவித்ததால் 22 மாநிலங்கள் நிலை கவலை அளிப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. லட்சத்தீவு மற்றும் புதுச்சேரி இரண்டு யூனியன் பிரதேசங்கள், கோவா, மேற்கு வங்கம் மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்கள் 30 சதவீதத்திற்கும் அதிகமான நேர்மறைத் தன்மையைப் பதிவு செய்துள்ளன என்று தரவு காட்டுகிறது. 9 மாநிலங்கள் மற்றும் சண்டிகர் 20 முதல் 30% வரையில் நேர்மறை விகிதங்களை காட்டுகிறது.

திங்கள் கிழமை தரவுகள் படி 8 மாநிலங்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்கள் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த வாரம் இருந்த 11 மாநிலங்களில் இருந்து இது 8 ஆக குறைந்துள்ளது. மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், பீகார், டெல்லி, மத்தியப் பிரதேசம், மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 6 மாநிலங்களில் நோய் தொற்று மற்றும் நேர்மறை விகிதம் என இரண்டும் குறைந்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் வடகிழக்கில் அமைந்துள்ள திரிபுரா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் மற்றும் மிசோரம் உள்ளிட்ட மாநிலங்கலில் வழக்குகள் மற்றும் நேர்மறை விகிதம் அதிகரித்து வருகிறது. புதுச்சேரி மற்றும் ஆந்திரா, மேற்கு வங்கம், ஒடிஷா, அசாம் மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களில் நோய் தொற்று அதிகரித்தாலும் நேர்மறை விகிதம் குறைந்து வருகிறது.

199 மாவட்டங்களில் கடந்த 2 வாரங்களாக நோய் தொற்று குறைந்து வருகிறது என்று கூறப்பட்டுள்ளது. 39 மாவட்டங்கள் (உ.பி) மற்றும் ம.பியில் உள்ள 33 மாவட்டங்களிலும் வழக்குகள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. மகாராஷ்ட்ரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நோய் தொற்று குறைந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் புனே, நாக்பூர் மற்றும் நாசிக்; உ.பி.யில் லக்னோ மற்றும் வாரணாசி; மற்றும் சூரத் (குஜராத்); குவாலியர் (மத்தியப் பிரதேசம்); மற்றும் ராஜ்பூர் (சத்தீஸ்கர்) மாவட்டங்களில் கொரோனா தொற்று மற்றும் நேர்மறை விகிதங்கள் குறைந்து வருகிறது.

கேரளாவில் மலப்புரம் மற்றும் கொல்லம், தமிழகத்தில் கோவை மற்றும் செங்கல்பட்டு, ஆந்திராவில் ஆனந்தப்பூர் மற்றும் ஒய்.எஸ்.ஆர் மாவட்டம், கர்நாடகாவில் பல்லாரி ஆகிய மாவட்டங்களில் நேர்மறை விகிதம் மற்றும் நோய்தொற்று அதிகரித்து வருகிறது.

source https://tamil.indianexpress.com/india/covid-19-positivity-declines-new-cases-down-in-200-districts-304735/