District Muzaffarnagar : காலை 10.45 மணி இருக்கும். இரும்பு கிரில்லுக்கு வெளியே வாசலில் ஆம்புலன்ஸில் ஒருவர் படுத்திருக்க அவருடைய முகத்தில் ஆக்ஸிஜன் முகக்கவசம். அருகில் அவருடைய மனைவி. அவருடைய கைகளை பிடித்த வண்ணம் அமர்ந்திருக்கிறார். ஐந்து நிமிட அமைதிக்கு பிறகு நாங்கள் அவரை எங்கே அழைத்து செல்வோம் என்று மனைவி சத்தமிட, இடமில்லாமல் இருக்கும் போது நாங்கள் என்ன செய்ய முடியும் என்கிறார் செவிலியர். பிறகு நோயாளியின் மனைவியிடம் அவரை தூங்கவிடாதே என்று கூறிவிட்டு சென்றார்.
ஏப்ரல் ஆரம்பத்தில் இருந்து நாடு முழுவதும் இந்த பதில்கள் தான் எங்கும் கேட்கிறது. ஆனால், இது உத்தரபிரதேசத்தில் உள்ள முசாபர்நகரின் மாவட்ட மருத்துவமனை ஆகும். 2.6 லட்சத்திற்கும் அதிகமாக கொரோனாவிற்கு சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும், நாட்டில் நான்காவது அதிக அளவு கேசலோடைக் கொண்ட மாநிலத்தில் இந்த நகரம் அமைந்துள்ளது.
7.82 லட்சத்துக்கும் அதிகமான நபர்களுக்கு ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து தொற்று ஏற்பட்டுள்ளது. இது மாநிலத்தின் மொத்த கொரோனா நோய் தொற்று எண்ணிக்கையில் 55% ஆகும். இதுவரை இறந்த நபர்களில் 40% ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு ஏற்பட்டது.கோரக்பூர், பரேலி, மொராதாபாத் மற்றும் மீரட் போன்ற சிறிய நகரங்களில் அதிக அளவு கொரோனா நோயாளிகள் உள்ளனர்.
மகாராஷ்டிரா கொரோனா அலையை சமன் செய்யத் தொடங்கியுள்ள நிலையில், உபியில் கோவிட் வளைவு எவ்வாறு தேசிய பரவலை வரையறுக்கும். இதைப் புரிந்துகொள்ள, இந்தியன் எக்ஸ்பிரஸ் மேற்கு உ.பி.யில் முசாபர்நகரில் தொடங்கி இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலத்தில் இரண்டாவது அலைகளைக் கண்காணிக்க ஒரு பயணத்தை மேற்கொண்டது.
அவர்களை கோபப்படுத்த வேண்டாம். நான் பேசுகிறேன் என்று மாவட்ட மருத்துவமனைக்கு வெளியே நிற்கும் ஆம்புலன்ஸின் ஓட்டுநர் நோயாளியின் சகோதரருக்கு ஆறுதல் கூறுகிறார். பிறகு அவர் செவிலியரிடம் சென்று, ஆக்ஸிஜன் அளவு குறைவாக உள்ளது. ஆம்புலன்ஸில் ஆஜ்ஸிஜன் உள்ளது. ஆனால் சில மணி நேரங்கள் தான் வரும். நான் இப்போது என்ன செய்வது என்று கேட்டார். அமைதியான செவிலியர், “கோவிட்-பாசிட்டிவ் அறிக்கை இருக்கிறதா?” என்று கேட்கிறார். அல்மாஸ்பூரில் இருந்து வருகிறோம். சோதனை ஏதும் செய்யவில்லை என்று கூறியதும் தலையசைத்துவிட்டு உள்ளே செல்கிறார் செவிலியர். அவருடைய சகோதரரிடம் திரும்பிய ஆம்புலன்ஸ் ட்ரைவர், உங்களை கைவிட மாட்டேன் என்று கூறுகிறார்.
26 வயதுமிக்க குமார் அரசு சுகாதாரத்துறை ஊழியர். அவர் ஆம்புலன்ஸை ஒரு ஓட்டுநர் உதவியுடன் இயக்குகிறார். அவசர மருத்துவ டெக்னிசியனாக இருக்கும் அவரிடம் பி.பி.இ. கிட் இல்லை, சானிடைஸர் இல்லை, கையுறைகளும் இல்லை மற்றும் பாதுகாப்பிற்காக அவர் எதுவும் செய்யவில்லை. முகத்தில் ஒரு துணியால் ஆன முகக்கவசம்.
“கோவிட் ஆம்புலன்ஸ்கள் உள்ளன, அவற்றில் அனைத்தும் உள்ளது. என்னுடையதில் எதுவும் இல்லை. ஆனால் இந்த நாட்களில், காய்ச்சல் மற்றும் குறைந்த அளவு ஆக்ஸிஜனை கொண்ட ஒரு நோயாளியைக் காணும்போது, அது கோவிட் என்று எங்களுக்குத் தெரியும். நான் அவர்களை இறக்க விட முடியாது. இந்த ஆம்புலன்ஸ் இங்கிருந்து கூட இல்லை. நான் 30 கி.மீ தூரத்தில் உள்ள மோர்னாவிலிருந்து அழைக்கப்பட்டேன், ”என்கிறார் குமார்.
குமாரின் பெற்றோர் அவரை வீட்டில் இருக்குமாறு கெஞ்சியுள்ளனர். அவருக்கு கொரோனா தொற்று ஏற்படலாம் என்பதில் உறுதியாக இருக்கிறார். “நான் ஒரு மாதத்திற்கு ரூ .12,500 சம்பாதிக்கிறேன். அது என் குடும்பத்திற்கு முக்கியம். அவர்கள் எனக்காக வேண்டிக்கொள்கிறார்கள். இது என் வாழ்க்கையின் இருப்புநிலை என்று அவர் கூறுகிறார்.
100 மீட்டருக்கு அப்பால் வார்டுகளுக்கு செல்லும் ஒரு வாசல் உள்ளது. அங்கு தனிமை வார்ட்கள் என்பது வெறும் பேச்சளவில் தான் இருக்கிறதே கொரோனா நோயாளிகள் குழந்தைகள் மற்றும் மகப்பேறு வார்டுகளில் கூட இருக்கிறார்கள். அவர்களை கவனித்துக் கொள்ள ஒவ்வொரு நோயாளிக்கும் அருகே அவரது குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர்.
இது ஒரு போர்க்களம். மருத்துவர்கள் அவர்களால் முடிந்த அளவுக்கு பணியாற்றுகிறார்கள். செவிலியர்களும் வார்டு பாய்களும் கூட அவ்வாறே கடினமாக உழைக்கிறார்கள். அளவுக்கு அதிகமாக உழைக்கிறார்கள். நோயாளிகள் அருகில் உறவினர்கள் இல்லை என்றால் அவர்கள் சரியாக கவனிக்கப்படுகிறார்களா என்பது தெரியாமல் போய்விடும். எனவே நாங்கள் அவர்களுக்கு தேவையான எல்லாம் கிடைப்பதை உறுதி செய்ய இங்கேயே இருக்கிறோம் என்று 35 வயதான தர்மேந்திர சிங் கூறியுள்ளார்.
மதியத்திற்கு பிறகு வேலைப்பளு மருத்துவர்களுக்கு மேலும் அதிகரிக்க, செவிலியர்கள் மருத்துவர்கள் ஆனார்கள். வார்டு பாய்கள் செவிலியர்களாக செயல்பட துவங்கினார்கள். குடும்ப உறுப்பினர்கள் வார்டு ஊழியர்களாக மாறிவிட்டன. சிங்கிற்கு எந்த நோய் தொற்றும் ஏற்படவில்லை. அவருடைய முகக்கவசம் தாடைக்கு கீழே தான் இருக்கிறது. 20 நோயாளிகளை கவனித்துக் கொள்ள 30 உறுப்பினர்கள் உள்ளனர். புழுக்கமாகவும் மக்கள் அதிகம் இருப்பதால் திணறடிப்பதாகவும் இருக்கிறது. எனக்கு கொரோனா இருக்குமா என்று யோசிக்க கூட என்னால் முடியவில்லை. என் அம்மாவிற்கு சரியானால் நான் என்னைப் பற்றி யோசிப்பேன் என்றார் சிங்.
மற்றொரு அறையில், குறைந்தது 20 நோயாளிகள், ஒரு மருத்துவர் மற்றும் இரண்டு செவிலியர்கள் உள்ளனர். மருத்துவர் நுழைகிறார், ஒரு நோயாளியைச் சரிபார்க்கிறார், ஒரு மருந்து எழுத வெளியேறுகிறார், நகர்கிறார். அதிக எண்ணிக்கையாளான நோயாளிகள் இருப்பதால் எங்களால் கையாள முடியவில்லை. எனவே எங்களுக்கு குடும்பங்கள் தேவை. அறிவுறுத்தல்களைக் கேட்க எங்களுக்கு கரங்கள் தேவை”என்று அவர் கூறுகிறார்.
நிர்வாகம் அதன் சிறந்த முயற்சியை மேற்கொண்டு வருவதாக முசாபர்நகரின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் மகாவீர் லால் ஃபாஜ்தார் கூறுகிறார். “எங்களுக்கு மாவட்டத்தில் ஒரு மருத்துவக் கல்லூரி உள்ளது, அதில் 300 படுக்கைகள் உள்ளன, அவற்றில் 197 படுக்கைகளில் நோயாளிகள் உள்ளனர். எங்களிடம் மூன்று தனியார் மருத்துவமனைகளும் தலா 50 படுக்கைகள் உள்ளன, அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. மாவட்ட மருத்துவமனை தனிமைப்படுத்தப்படுவதோடு, தனிமைப்படுத்தும் வார்டையும் கொண்டுள்ளது, ”என்று அவர் கூறுகிறார். மாவட்டத்தில் மொத்தம் 120 ஐ.சி.யூ படுக்கைகள் மற்றும் 42 வென்டிலேட்டர்கள் இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் மொத்தம் 20 படுக்கைகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் நோயாளிகள் எண்ணிக்கை அதிகம் உள்ளதால் 10 முதல் 15 நபர்கள் அதிகமாக உள்ளனர். ஆக்ஸிஜன் செறிவு குறைவாக இருக்கும், ஆனால் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளாத நோயாளிகளை நாங்கள் தனிப்படுத்துகிறோம். அவர்களுக்கு செறிவூட்டிகளை வழங்குகிறோம். இணை நோய்கள் அவர்களுக்கு இருந்தால் அதற்கு சிகிச்சை அளிக்கிறோம். சி.டி. மார்பு ஸ்கேன் செய்கிறோம். கோவிட் இருந்து செறிவு குறைவாக இருந்தால் அவர்களை மூன்றாம் கட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்புகிறோம் என்று ஃபௌஜ்தார் கூறினார்.
இவர்கள் ஒரு வகையில் அதிர்ஷ்டசாலிகள் தான். முசாஃபர்நகருக்கு வெளியே 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஐ.டி.ஐ. கட்டிடம் ஆக்ஸிஜன் நிரப்பும் ஆலையாக மாறியுள்ளது. 200க்கும் மேற்பட்டோர் தினமும் வரிசையில் வந்து நிற்கின்றனர். ஒவ்வொருவரும் காலி சிலிண்டருடன் அதிகாலையில் இருந்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஒவ்வொரு நாள் காலையிலும் 5 மணிக்கே இங்கு வந்து காத்திருக்கும் நாஜிம் முகமது, இன்று தான் லேட்டாக வந்துவிட்டதாகவும், பின்னால் நிற்கிறேன் என்று கூறுகிறார். என்னுடைய அம்மா பாரத் மருத்துவமனையில் இருக்கிறார். அங்கு ஆக்ஸிஜன் இல்லாததால் சொந்தமாக எடுத்துவர கூறினார்கள். அதனால் நான் இங்கு வந்து தினமும் காத்திருக்கிறேன். நேற்று 16 மணி நேர காத்திருப்பிற்கு பிறகு தான் ஆக்ஸிஜன் சிலிண்டர் இரவு 11 மணிக்கு கிடைத்தது. எனக்கு உதவ யாரும் இல்லை என்று கூறினார்.
இப்போது மணி 11 ஆகிவிட்டது. இன்னும் இவர்கள் ஆரம்பிக்கவில்லை. என்னுடைய அம்மாவுக்கு என்ன ஆகும் என்று தெரியவில்லை. முசாஃபர்நகரில் இருக்கும் ஒரே ஒரு ஆக்ஸிஜன் ஆலை இதுமட்டும் தான். காவல்துறை அதிகாரி ஒருவரிடம் உதவி கேட்ட போது அவர் அலைபேசி எண் ஒன்றுக்கு அழைத்தார். ஆனால் அங்கிருந்து பதில் ஏதும் வரவில்லை. யாரும் பதில் அளிக்கவில்லை பாருங்கள் என்று கூறினார். 168 நபர்கள் சிலிண்டருடன் காத்திருக்கின்றனர். 168 நபர்களின் உயிர் இவர்களின் கையில் தான் இருக்கிறது என்றார்.
source https://tamil.indianexpress.com/india/district-muzaffarnagar-here-nurses-are-doctors-ward-boys-are-nurses-families-are-ward-boys-300848/