வெள்ளி, 25 ஜூன், 2021

கொரோனா சிகிச்சைக்கு பிறகும் 12 வாரங்களுக்கு நோயின் தாக்கம்; சென்னையில் 24% பேர் பாதிப்பு

 25/06/2021 சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களில் 24% பேரிடம் அதன் நோய் தாக்கமும், அறிகுறிகளும் இருந்து வருகிறது என்றும், 76% பேர் முற்றிலும் நலமடைந்துவிட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, கொரோனா வைரஸ் தொற்றிற்கு பிறகு பல்வேறு உடல் நலப்பிரச்சனைகளால் அவதிப்படும் நோயாளிகளிக்கு தேவையான ஆலோசனைகள் டெலி-கவுன்சிலிங் மூலம் மருத்துவர்கள் அளித்து வருகின்றனர் என்று கூறியுள்ளார்.

கொரோனாவுக்கு பிந்தைய அறிகுறிகள் தொடர்பான விரைவான தேவைகள் மதிப்பீட்டிற்காக தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 48.2% பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குணமடைந்தவர்கள் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் – தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் ஆலோசகர் ரூபேஷ்குமார் தெரிவித்தார். மதிப்பீட்டிற்காக தேவை செய்யப்பட்டவர்களில் மீதம் உள்ளவர்கள் வீட்டில் தாங்களை தனிமைப்படுத்திக் கொண்டவர்கள். மதிப்பீட்டில் சேர்க்கப்பட்ட நோயாளிகளில் 34% க்கும் அதிகமானோர் இணை நோய்களை கொண்டிருந்தனர்.

23% பேருக்கு நீரிழிவு நோய் இருந்தது. 19% பேருக்கு ஹைப்பர் டென்சனும், 3.2% பேருக்கு 3.2% இதய நோயும், 0.8% பேருக்கு சிறுநீரக பிரச்சனையும், 1.1% பேருக்கு ஆஸ்த்துமாவும் இருந்தது.

இருமல், மூச்சு பிரச்சனை, உடல் சோர்வு, தூக்கமின்மை , மற்றும் உடல் எடை குறைவு போன்ற பிரச்சனைகளால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். 9% பேர் உடல் எடை குறைந்துள்ளது. 7% நபர்களுக்கு முடி உதிர்வு ஏற்பட்டுள்ளது. அதே போன்று உறக்கமின்மையால் 5% பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

1.6% நபர்கள் தொடர்ந்து மூச்சுத் திணறல், 0.8% மூட்டு வலி, 0.7% பசியின்மை மற்றும் 0.5% COVID-19 நோய்த்தொற்றுக்குப் பிறகு நினைவாற்றல் இழந்ததாகக் கூறினர். குணமடைந்த பின் அறிகுறிகளைப் புகாரளித்தவர்களில், 57% ஆண்கள் மற்றும் 43% பெண்கள். 45-59 வயதுடையவர்களில் (40%) தொடர்ச்சியான அறிகுறிகள் அதிகமாக இருந்தன, அதைத் தொடர்ந்து 30-44 வயதுடையவர்கள் (24%) இது போன்ற பாதிப்பை சந்தித்து வருகின்றனர். நோய்த்தொற்றின் ஆரம்ப கட்டத்தில் அறிகுறியில்லாமல் இருந்தவர்களில், 4% பேருக்கு சிகிச்சைக்கு பிறகு இத்தகைய அறிகுறிகள் பதிவாகியுள்ளன.

வீட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்களைக் காட்டிலும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களிடையே COVID-19 அறிகுறிகள் கணிசமாக அதிகமாக இருக்கிறது. மேலும் ஆக்ஸிஜன் சிகிச்சை தேவைப்பட்டவர்களிடமும் இந்த அறிகுறிகள் அதிகம் காணப்பட்டதாக கூறப்படுகிறது. கொரோனாவில் இருந்து குணம் அடைந்தாலும் இந்த அறிகுறிகள் 12 வாரங்களுக்கு மேல் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-news-24-percent-of-covid-19-recovered-patients-in-the-city-reporting-symptoms-317117/