Second wave : பல்வேறு துறைகளில் மீட்பு நடவடிக்கையை கொரோனா இரண்டாம் அலை தடுத்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் நிலவும் ஊரடங்கு மற்றும் தொற்று நோய் பரவல் சிறுகுறு தொழில்களையும், சேவை பிரிவுகளையும் கடுமையாக பாதித்துள்ளதாக, வங்கிகள் மற்றும் மைக்ரோ கடன் வசதிகளை வழங்கும் நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள கடன் நழுவல் தொடர்பான புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.
ஹோட்டல்கள், சுற்றுலா, போக்குவரத்து, விமான போக்குவரத்து முதல் வர்த்தகம், சிறிய உற்பத்தி அலகுகள், வருமானத்தை ஊக்குவிக்கும் குறிப்பிட்ட துறைகள் வரை அனைத்தும் வருமான வீழ்ச்சி மற்றும் கடன்களை திருப்பி செலுத்துவதற்கான இயல்புநிலைகளின் உயர்வு என இரண்டிலும் அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை வெளிப்படுத்த துவங்கியுள்ளன.
ஒட்டுமொத்த நுகர்வுப் பாதையில் எந்த ஒரு முன்னேற்றமும் வர்த்தகம், ஹோட்டல்கள், போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு தொடர்பான சேவைகள் போன்ற சேவைத் துறைகள் மீட்கப்படுவதை சார்ந்துள்ளது. இந்த துறைகள் 20 கோடி குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் உள்ளது. பட்டியலிடப்பட்ட இடத்தில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் நல்ல வளர்ச்சி எண்ணிக்கையை காட்டி இருக்கின்ற போதிலும், ஒழுங்கமைக்கப்படாத பிரிவில் உள்ள தாக்கத்தை உணர முடியும்.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் செயல்படாத சொத்துகளில் 60% எம்.எஸ்.எம்.இ மற்றும் மைக்ரோ நிறுவனங்களின் பங்கு அடங்கும். இதற்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் இது இரு மடங்கு அதிகம். இந்தியன் வங்கியின் அதிகாரி ஒருவர், ஏப்ரல் 2 வாரத்தில் இருந்து கொரோனா தொற்று வணிகங்களை பாதித்துள்ளது என்று கூறினார்.
ஸ்லிப்பேஜ்கள் (கடன் நழுவல்கள்) எம்.எஸ்.எம்.இ-இல் இருந்து வருகின்றன. ஏப்ரல், மே மாதங்களில் உள்ள அசையா சொத்துகள் 60% சிறு மற்றும் குறு வணிக நிறுவனங்களுடையது. இதற்கு முன்பு இவை 30 முதல் 40% மட்டுமே இருந்தது. ஊரடங்கு, மூலப்பொருட்கள் கிடைக்காமல் போனது, வேலையாட்களுக்கான தடை மற்றும் போக்குவரத்து பிரச்சனை ஆகியவை இதற்கு காரணம் என்று அந்த வங்கி ஊழியர் கூறினார்.
மைக்ரோ தொழில் முனைவோர்களுக்கு பாதுகாப்பற்ற நிதியை வழங்கியுள்ள சிறு நிதி நிறுவனங்கள், நீடித்த கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக நிதியை திருப்பி பெறுவதில் ஏற்பட்டுள்ள தாமத்தை உணர துவங்கியுள்ளன. 30 நாட்களுக்கு மேல் நிலுவைத் தொகை கொண்ட கடன்கள் அல்லது போர்ட்ஃபோலியோ அட் ரிஸ்க் என்று வழங்கப்படும் (PAR) இந்த மாதத்தில் 14 முதல் 16 சதவிகிதம் வரை இருக்கலாம். மார்ச் மாதத்தில் இது 6 முதல் 7% வரை இருந்தது என்று ரேட்டிங் நிறுவனம் க்ரிஸில் கூறியுள்ளது.
எங்கள் வாடிக்கையாளர்கள் முக்கியமாக சிறு வணிகர்கள் மற்றும் தினசரி பயன்பாட்டு தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ள வணிகர்கள், தங்கள் கடையைத் திறக்க முடியவில்லை, அதற்கேற்ப அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று ஈக்விடாஸ் சிறு நிதி வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பி.என் வாசுதேவன் கூறினார்.
2021 மே மாதத்தில் இந்தியாவில் நடைபெற்ற சில்லறை வர்த்தகத்தின் மதிப்பு, கொரோனா காலத்திற்கு முன்பு நடைபெற்ற வர்த்தகத்தோடு ஒப்பிடும் போது அது -79 சதவிகிதமாக உள்ளது என்று, மே 2019ன் சில்லறை விற்பனை மதிப்பீட்டை கணக்கிட்டு இந்திய சில்லறை வியாபாரிகள் சங்கம் கூறியுள்ளது. ஜூன் மாதத்தில், படிப்படியாக வியாபரங்கள் திறக்கின்ற காரணத்தால் மாற்றங்கள் நிகழ்வும் என்று வர்த்தகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனாலும் சில்லறைத் தொழிலுக்கு பல்வேறு அரசாங்க அமைப்புகளின் கூட்டு ஆதரவு தேவை ”என்று இந்திய சில்லறை விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி குமார் ராஜகோபாலன் கூறினார்.
2021ம் ஆண்டுக்கான நிதியாண்டில் கொரோனாவால் இந்தியன் ஹோட்டல்ஸ் நிறுவனம் ரூ. 524 கோடி இழப்பீடு அடைந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. ஆண்டின் இரண்டாம் பாதியில், நிறுவனம் தேவைகளை மீட்டெடுப்பதற்கான சில அறிகுறிகளைக் கண்டது, குறிப்பாக ஓய்வு இடங்களுக்கு. சில மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக தொற்றுநோயின் இரண்டாவது அலை ஏற்பட்டுள்ள நிலையில், அரசாங்கத்தால் தடுப்பூசி செலுத்தும் பணிகள் அதிகரித்துள்ளன, மேலும் நிறுவனம் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது என்று இந்தியன் ஹோட்டல்ஸ் கூறியுள்ளது.
நடப்பு காலகட்டத்தில் நுகர்வோர் நம்பிக்கை மிகவும் குறைவாக உள்ளது. 2019 ஜூலை முதல் எதிர்மறை திசையிலேயே அது இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலைமை குறியீடு மார்ச் 53.1% ஆக இருந்தது. அது 2021 மே மாதத்தில் 48.5 ஆக குறைந்து. என்று இந்திய ரிசர்வ் வங்கி நுகர்வோர் நம்பிக்கை கணக்கெடுப்பு முடிவுகள் அறிவித்துள்ளது.
2022 ஆம் நிதியாண்டில் விமானப் போக்குவரத்து வீழ்ச்சியடையும், அடுத்த நிதியாண்டின் நான்காம் காலாண்டில் மட்டுமே முழுமையாக மீட்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று க்றிசில் கூறியுள்ளது. பயணிகளுக்கான விமானப் போக்குவரத்து பெரிதும் பாதிப்படைந்துள்ளது. பிப்ரவரி 2021 சமயத்தில் இருந்த நிலையைக் காட்டிலும் தற்போது அது இரண்டு மடங்காக குற்றைந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு முந்தைய காலத்தோடு ஒப்பிடும் போது இது வெறும் 10% ஆக உள்ளது.
மே மாதத்தில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள், அதற்கு முந்தைய மாதத்தில் பெற்ற ஒப்பந்தங்களில் மூன்றில் ஒரு பங்கு இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களை டெலிவரி செய்தது. முச்சக்கர வண்டிகள் 1,200 யூனிட்டுகளையே விற்பனை செய்தன. வணிக வாகனத் துறையில் ஐந்து நிறுவனங்களின் ஒட்டுமொத்த விற்பனை முந்தைய மாதத்தின் விற்பனையில் பாதியாக இருந்தது. எஸ்.பி.ஐ வங்கியின் தலைமை பொருளாதார ஆலோசகர் சௌமியா கோஷ், வர்த்தகம், ஹோட்டல்கள், போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு தொடர்பான சேவைகள் போன்ற வர்த்தகங்களை மீட்டெடுப்பதை பொறுத்து தான் 25 கோடி குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் இந்த சேவைகளின் ஒட்டுமொத்த நுகர்வுப் பாதை அமையும் என்று கூறியுள்ளார்.
source https://tamil.indianexpress.com/india/second-wave-60-per-cent-addition-to-bad-loans-from-msmes-315690/