தமிழகத்தில் தற்போது பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்சி, ஐசிஎஸ்சி, ஐஜிசிஎஸ்இ மற்றும் ஐபி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் தடை செய்யப்பட்டது. இதனால் மாணவர்கள்ன் கல்வித்தரம் வெகுவாக பாதிக்கப்பட்ட நிலையில், வீட்டில் இருந்தபடியே மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டது. இதனையடுத்து 10, 11 மற்றும் 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் மாணவர்களின் முந்தைய வகுப்பு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்தக்கொள்ளப்படும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மெல்ல கட்டுக்குள் வரும் நிலையில், ஊரடங்கு உத்தவில் தளர்வுகள அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த இரு தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட தளர்வில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கை தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில், தற்போது மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்சி, ஐசிஎஸ்சி, ஐஜிசிஎஸ்இ மற்றும் ஐபி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிகல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டுக்காள கல்வி கட்டணம் 75% மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பேருந்து கட்டணம், சீருடை கட்டணம் என இதர கட்டணங்கள் யாவும் வசூலிக்க கூடாது என்றும், 75% கல்விக்கட்டண விபரங்களை அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்விக்கட்டணம் 100% செலுத்த வேண்டும் என்று தனியார் பள்ளிகள் வற்புறுத்துவதாக பெற்றோர்கள் புகார் அளித்து வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில், தற்போது பள்ளிக்கல்வித்துறையின் இந்த அறிவிப்பு பெற்றோர்களிடையே சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
source https://tamil.indianexpress.com/education-jobs/tamilnadu-school-education-department-announced-new-fees-details-316277/