கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள 8 அப்ளிகேஷன்கள் மூலம் ஸ்மார்ட்போன்களை ஜோக்கர் மால்வேர் தாக்கும் அபாயம் இருப்பதால் உடனடியாக அந்த அப்ளிகேஷன்களை மொபைலில் இருந்து அன்இன்ஸ்டால் செய்யுமாறு பயனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன்கள் வரவுக்கு பின்னர் நாம் இருந்த இடத்தில் இருந்துகொண்டே உலகம் முழுவதும் நடக்கும் அனைத்து செய்திகளையும் விரல் நுனியில் தெரிந்து கொள்கிறோம் அத்துடன் வங்கி பரிவர்த்தனை மேற்கொள்வது, ஓடிடி தளங்கள் மூலம் படம் பார்ப்பது உள்ளிட்ட பல உபயோகமான செயல்களை செய்து வருகிறோம். இதுபோன்ற நமது நேரத்தை பல விதங்களில் ஸ்மார்ட்போன்கள் மிச்சப்படுத்தினாலும், நமது தகவல்களும் இந்த ஸ்மார்ட்போன்கள் மூலம் லீக் ஆக வாய்ப்புள்ளது. நாம் நமது ஸ்மார்ட்போனில் பயன்படுத்தும் அப்ளிகேஷன் மூலம் மால்வேர்கள் நமது மொபைல்போன்களில் உள்நுழைந்து நமது தகவல்களை இணையத்தில் கசிகின்றன.
அந்த வகையில் தற்போது ஆண்டிராய்ட் மொபைலை ஜோக்கர் மால்வேர் தாக்கி பயனர்களின் மெசேஜ், ஓடிபி உள்ளிட்ட தகவல்களை திருடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள Auxiliary Message, Fast Magic SMS, Free CamScanner, Super Message, Element Scanner, Go Messages, Travel Wallpapers, Super SMS உள்ளிட்ட 8 அப்ளிகேஷன்கள் மூலம் ஜோக்கர் மால்வேர் மொபைகளில் நுழையும் வாய்ப்பு இருப்பதால் உடனடியாக அவற்றை அன்இன்ஸ்டால் செய்யும்படி ஆண்டிராய்டு மொபைல் பயன்படுத்தும் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
source https://news7tamil.live/android-smartphone-users-alert-remove-these-8-apps.html