சனி, 26 ஜூன், 2021

கிஷோர் கே.சாமிக்கு குண்டர் சட்டம் : ஜாமீன் கிடைக்குமா?

 

25.06.2021 Kishore K.Samy IN Goondas Act : முன்னாள் முதல்வர்கள் குறித்து அவதுராக பேசிய வழக்கில் கைது செய்யப்ட்டுள்ள யூடியூபர் கிஷோர் கே சாமி மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம்  அவர் 1 வருடத்திற்கு ஜாமீன் கிடைக்காமல் சிறையில் இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக திமுக ஐடி விங்க் நிர்வாகி கடந்த ஜூன் மாதம் 17ம் தேதி சங்கர் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், கைது செய்யப்பட்ட யூடியூபர் கிஷோர் கே சாமி தற்போது செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் பெயரில் பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் குவிந்த வண்ண்ம் உள்ளது.

சமூக வலைத்தளங்களில் அவரால் பாதிப்புக்கு உள்ளான பலரும் அவர் மீது புகார் அளித்து வரும் நிலையில், இதில் பல புகாரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகை ரோகிணியும் கிஷோர் கே. சாமி மீது புகார் அளித்திருந்த நிலையில்,  கீழ்ப்பாக்கம் காவல் துறையினர் இது குறித்து விசாரண நடத்தி வருகின்றனர். மேலும் ஏற்கனவே பெண் பத்திரிகையாளர்கள் சிலர் கொடுத்து புகாரின் அடிப்படையில் பல காவல் நிலையங்களில் விசாரணை தொடங்கியுள்ளதாகவும், அவர் மீதான புகார்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், அதின எண்ணிக்கையிலான புகார்கள் வருவதால் அவர் மீது குண்டர் சட்ட வழக்கு பதிவு செய்ய சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டதை தொடர்ந்து கிஷோர் சாமி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இந்த சட்டத்திற்காக நகல், தற்போது செல்கல்பட்டு சிறைத்துறையிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சங்கர் நகர் காவல் நிலையத்தில் வழக்கு தொடர்பக தாம்பரம் நீதிமன்றம் கிஷோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தற்போது அவர் மீது குண்டாஸ் சட்டத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதால், 1 ஆண்டு காலம், ஜாமீன் கிடைப்பது அரிது என்று பலரும் கூறி வருகின்றனர்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-youtuber-kishore-k-samy-arrested-in-goondas-act-317339/