சமீபத்தில் தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 10 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் முதல்முறையாக முதல்வர் அரியணையில் அமந்துள்ளார். இந்த தேர்தலில் திமுக மட்டுமே தமிழகம் முழுவதும் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், கொங்கு மட்டலத்தில் மட்டும் திமுக வெற்றியை பெறமுடியவில்லை. குறிப்பாக கோயம்புத்தூரில், மாவட்டத்தில் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றியை பெற்றிருந்தது.
மாநிலம் முழுவதும் திமுக மட்டுமே பெரும்பான்மை பெற்ற இந்த தேர்தலில், கோயம்புத்தூர், மாவட்டத்தில் தி.மு.க 10 இடங்களை இழந்தது. இது 2016 சட்டமன்ற தேர்தலை விட மோசமானது, இந்நிலையில், மேற்கு மண்டலத்தில் திமுகவை பலப்படுத்தும் நோக்கில் புதிய பிரதிநிதிகளை நியமிக்க உள்ளதாக அண்ணா அறிவாலயத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த பொறுப்பிற்கு, திமுக மகளிர் அணி செயலாளர் மற்றும் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, பொறுத்தமாக இருப்பார் என்றும், சவாலான மற்றும் கட்சியின் முன்னேற்றத்திற்கான பணிகளில் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று கூறி அவரை நியமிக்க பேச்சுவார்த் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது
இந்நிலையில், கொங்கு மண்டலத்தில், தேர்தலில் அடைந்த மோசமான தோல்வியைப் பற்றி ஆய்வு செய்ய கட்சித் தலைமை தனது நம்பகமான பிரசிதிநி ஒருவரை நியமித்திருப்பதாகக் கூறப்படுகிறது.மேலும் கட்சியின் சட்ட ஆலோசகர் மற்றும் மாநிலங்களவை தலைமையிலான குழுவை முதல்வர் ஸ்டாலின் அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. கோயம்புத்தூரில், தேர்தல் தோல்வியை மதிப்பிடுவதற்காக எம்.பி. என்.ஆர். இளங்கோ தலைமையிலான குழு செயல்பாட்டாளர்களுடன் விசாரணைகளை நடத்தியுள்ளது. திமுக இளைஞர் பிரிவு செயலாளர் மற்றும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் தேர்லின் போது அங்கு முகாமிட்டிருந்தார்.
மேலும் கொங்கு மண்டலத்தில் கட்சியை புத்துயிர் பெறுவதற்காக செல்வாக்கு மிக்க திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கோயம்புத்தூருக்கு அடிக்கடி வருகை தர திட்டமிட்டுள்ளதாக குர்றப்படுகிறது, இது கோயம்புத்தூரில் உள்ள முன்னாள் அதிமுக அமைச்சர்களின் வளம், மற்றும், ஒரு சில திமுக செயற்பாட்டாளர்கள் மாவட்டத்தில் சக்திவாய்ந்த முன்னாள் அதிமுக அமைச்சர்களுடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளதாக, விசாரணைக்குழு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் திமுக வெற்றி பெற்ற போதிலும், சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளது. இதனால் மேற்கு மண்டலத்தில் கட்சி விவகாரங்களை மேற்பார்வையிடுவதற்கான தலைமைக்கு கனிமொழியை நியமிக்க தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது, ஏப்ரல் 6 தேர்தலுக்காக ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலைவர்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும் (மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன் மேற்கு மாவட்டங்களுக்கு பொறுப்பாக இருந்தார்), தி.மு.க தலைமையால் நியமிக்கப்பட்ட நியமனங்கள் நீண்டகால கட்சி மீள் எழுச்சிக்காக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-stalin-team-research-in-coimbatore-for-assembly-election-fail-313217/