வெள்ளி, 18 ஜூன், 2021

பெண்கள் கோட்டையாக மாறிய புதுக்கோட்டை!

 

1886-ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்து பெண்கள் கல்வி கற்க முடியாத நிலையில் வீட்டில் இருந்தே படித்து பெண் குலத்திற்கு பெருமை சேர்ந்தவர் முத்துலட்சுமி ரெட்டி. புதுக்கோட்டை மகாராஜா கல்லூரியில் படித்து கடந்த 1912-ம் ஆண்டு மருத்துவ பட்டம் பெற்றவர் முத்துலட்சுமி ரெட்டி. தற்போது அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக புதுச்கோட்டை மாவட்டத்தில் அனைத்து உயர் பதவிகளுக்கும் பெண்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்கோட்டை மாவட்ட  கலெக்டர் முதல் மாவட்ட கல்வி அலுவலர் வரை அனைத்து உயர் பதவியிலும் பெண்களே புதுக்கோட்டை மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் புதுக்கோட்டை பெண்களின் கோட்டையாக மாறி உள்ளது,. தமிழகத்தில் ந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை பெற்று முதல்வர் பதவியில் அமர்ந்துள்ள மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் பல மாற்றங்களை கொண்டு வருகிறார். இதில் முக்கியமானது அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் பல்வேறு முக்கிய துறைகளின் உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு பல மாவட்டங்களில் இளைஞர்கள் மாவட்ட ஆட்சியர்களாக நியமிக்கப்பட்டுள்ளதனர்.  ஆனால் இந்த மாற்றங்கள் மற்ற மாவட்டங்களில் எப்படி இருந்தாலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் பெண்களுக்கே அதிக முக்கியத்துவம் தரப்பட்டு மாவட்டத்தின் உயர் பதவியில் அவர்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் கலெக்டராக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குநர் கவிதா ராமு நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட எஸ்.பியாக பெரம்பலூர் மாவட்ட எஸ்பியாக பணியாற்றிய நிஷா பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார்.  நாகையில் பயிற்சி கலெக்டராக உள்ள அபிநயா தொடர்ந்து புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.  புதுக்கோட்டை நகர டி.எஸ்.பியாக லில்லி கிரேஸ் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதல் எஸ்.பியாக கீதாவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராக பூவதியும், சுகாதாரத்துறை துணை இயக்குநராக கலைவாணியும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக விஜயலட்சுமியும் பணியாற்றி வருகிறார்கள். இதில்  புதுக்கோட்டை மாவட்ட எஸ்பியாக இருந்த பாலாஜி சரவணன், சென்னைக்கு துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ள நிலையில்,  வருவாய் கோட்டாட்சியராக இருந்த டெய்சி குமார், கடலூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராக மாற்றம் செய்யப்ட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில்,  தலைமை பொறுப்பேற்றுப்பில் அனைவரும் பெண்கள் நியமிக்கப்பட்டிருப்பது எதர்ச்சியாக நடந்த ஒன்றாக இருந்தாலும், இந்த நியமனம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கு பெருமை சேர்க்கும் விஷயம் என்பதில் மாற்றுகருத்து இல்லை.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-pudukkottai-district-all-higher-post-appointed-womens/