22 06 2021 வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்த போது, தாறுமாறாக கார் ஓட்டி, போலீசாருடன் தகாராறில் ஈடுப்பட்ட வழக்கறிஞர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.
சாலை போக்குவரத்து தொடர்பாக அடுக்கடுக்கான பல சட்டங்கள் அமல்படுத்தப்பட்டாலும் நாடு முழுவதும் ஆங்காங்கே சட்டத்தை மீறும் செயல் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதில் பாமர மக்கள் முதல் படித்த இளைஞர்கள் வரை அனைவரும் சட்டத்தை மீறும் செயல்களில் ஈடுபட்டு வழக்கில் சிக்கியுள்ளனர். அந்த வகையில் சென்னையில், மதுபோதையில் கார் ஓட்டிய வழக்கறிஞர் வாகன சோதனையில் சிக்கியவுடன் போலீசாரிடம் வாக்கு வாத்தில் ஈடுபட்டுள்ளார்.
சென்னை கொண்டி தோப்பு காவலர் குடியிருப்பு பகுதியில் உள்ள வாகன சோதனை சாவடியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டு இருந்த போது, ஒரு கார் தாறுமாறாக வந்துள்ளது. அப்போது போலீசார் காரை மறித்த காரில் வந்த நபர் அருகில் இருந்த அரசு பேருந்து மீது மோதுவது போல் சென்று வாகனத்தை நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து போலீசார் அந்த இந்த காரை சோதனை செய்ததை தொடர்ந்து காரில் வந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், காரை ஓட்டி வந்த நபர் தான் வழக்கறிஞர் என்று கூறியுள்ளார். மேலும் முகக்கவசம் அணியாமல் இருந்த அவர், போலீசாரிடம் தகராறில் ஈடுபாட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த உதவி ஆய்வாளர் ராமசந்திரன் மது போதையில் தகராறு செய்த நபர் மீது வழக்கு பதிவு செய்து காரை பறிமுதல் செய்தனர். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் தகராறில் ஈடுபட்டவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பதும், அவர் மதுபோதையில் இருந்ததாகவும் போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் அவர் போலீசாருடன் தகராறில் ஈடுபட்ட சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.