24 06 2021 சுகாதாரத்துறை புதன்கிழமை வெளியிட்ட தகவலின்படி, சென்னையில் 396 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 6,596 நபர்களுக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கோயம்புத்தூரில் தினசரி பாதிப்பு 800க்கும் கீழ் பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் 793 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் 686 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,43,415 ஆக உள்ளது. கொரோனாவால் ஒரே நாளில் 166பேர் உயிரிழந்துள்ளனர். 57 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 109 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இதனால் மாநிலத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31,746 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தற்போது 52,884 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கோயம்புத்தூரில் 7,654 பேரும், ஈரோட்டில் 5318பேரும், சென்னையில் 3,447 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 10,432 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் 472பேருக்கும், திருப்பூர் மாவட்டத்தில் 419 பேருக்கும், தஞ்சாவூரில் 338 பேருக்கும், செங்கல்பட்டில் 277பேருக்கும், நாமக்கல் 269 பேருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் 17 மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு 100க்கும் கீழ் பதிவாகியுள்ளது.
கோயம்புத்தூரில் 25பேர், சென்னையில் 20பேர், வேலூரில் 15 பேர் என தமிழகத்தில் ஒரே நாளில் 166 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். மதுரை உட்பட 6 மாவட்டங்களில் உயிரிழப்புகள் இல்லை.
கடந்த 24 மணி நேரத்தில் 1,70,105 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 3 கோடியே16 லட்சத்து 75 ஆயிரத்து 744 பேருக்கு ஆர்டிபிசிஆர் சோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு 6,72,240 டோஸ் தடுப்பூசிகள் வந்துள்ளது. அவற்றில் 4,67,210 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள், 2,05,030 டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 28 லட்சத்து 27 ஆயிரத்து 184 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. புதன்கிழமை 1,77,422 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அவற்றில் 18-44 வயதுடைய 1,01,559 பேரும், 45-59 வயதுடைய 53,224 பேரும் அடங்குவர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/corona-cases-in-chennai-decreases-316764/