20/06/2021 சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், பெட்ரோல், டீசல் விலையில் மாநிலங்களுக்கு பங்கு கொடுக்காமல் அதிகமான வரியை ஒன்றிய அரசே எடுத்து கொள்வதாக தெரிவித்தார்.
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 10 ரூபாயாக இருந்த வரியை 32 ரூபாய் 90 காசுகளாக, ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளதாக கூறிய அவர், தற்போதைய சூழலில் வரியை குறைத்தால், அது மாநில அரசுக்கு தான் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைவாக உள்ள போதிலும், இந்தியாவில் மட்டும் அதிக விலைக்கு விற்கப்படுவதாக கூறிய அவர், தமிழ்நாடு அரசின் நிதிநிலை குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
source https://news7tamil.live/cant-reduce-state-tax-on-petrol-diesel-says-tn-finance-minister-ptr-palanivel-thiagarajan.html