Naveed Iqbal , P Vaidyanathan Iyer
25.06.2021 Srinagar-Delhi : ஜம்மு காஷ்மீரில் பிரதமரின் சந்திப்பு கடைசியாக முக்கிய விவகாரமாக மாறியது எப்போது என்றால் ஜனவரி 23, 2004. என்.டி.ஏ. ஆட்சியில் பிரதமராக பொறுப்பேற்றிருந்த அடல் பிஹாரி வாஜ்பாய், காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பிரிவினைவாதிகளை சந்தித்து பேசினார். அன்றைய துணை பிரதமர் எல்.கே. அத்வானி இந்த ஏற்பாட்டை டெல்லியில் ஒரு நாளைக்கு முன்பு உருவாக்க இந்த சந்திப்பு நடைபெற்றது. ஒன்பது மாதங்களுக்கு முன்னர், வாஜ்பாய் ஸ்ரீநகரில் தனது “இன்சானியாத் (மனிதநேயம்), ஜம்ஹூ-ரியாத் (ஜனநாயகம்) மற்றும் காஷ்மீரியத் (இந்து-முஸ்லீம் நட்பு) உரையை வழங்கியிருந்தார்.
இப்போது முக்கியமான வேறுபாடு என்னவென்றால், பிரதான தலைவர்கள் எல்லைக்கு தள்ளப்பட்டுள்ளனர், பிரதமர் நரேந்திர மோடியுடனான அவர்களின் சந்திப்பு ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது. மாநில அங்கீகாரம் என்பது தற்போது உயரத்தில் இருக்கும் அரசியல் பழம் போல் காணப்படுகிறது. இவை டெல்லி மற்றும் ஸ்ரீநகரில் ஏற்பட்டுள்ள சமன்பாட்டு மாற்றங்களை காட்டுகிறது.
“dil ki doori, Dilli se doori” என்று, வாஜ்பாயின் எண்ணங்கள் தொலைதூர எதிரொலியில் இருக்க, பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு கூறினார். 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி அன்று மத்திய அரசு அரசியல் சாசன பிரிவு 370-ஐ நீக்கி, மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பிறகு இந்த 14 தலைவர்களை சந்திப்பது தான் மோடியின் முதல் அரசியல் ஈடுபாடாகும். தெளிவாக, இரு தரப்பினரும் இதற்காக பயணித்திருக்கிறார்கள்.
குறைந்தது மூன்று முன்னாள் முதல்வர்கள் 221 நாட்கள் முதல் 436 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். நம்பிக்கை குறைவு மிகவும் ஆழமானதாக உள்ளது. இருப்பினும் பேச்சுவார்த்தை ஒன்றே முன்னேறி செல்வதற்கான வழி என்று அவர்கள் அறிந்திருக்கிறார்க்கள். இந்த சந்திப்பு அவர்களின் தொகுதிகளில் இடம் மற்றும் பேசும் புள்ளிகளை மீண்டும் தருகிறது – அரசியல் செயல்முறையை முன்னோக்கி தள்ள, புது டெல்லி அவர்களுடன் ஈடுபட வேண்டும்.
சரியான பாதையில் பயணிப்பதற்கான முதல்படி. ஜம்மு காஷ்மீரில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை விரைவில் அமர்த்துவதற்கு அரசு ஆர்வமாக உள்ளது என்பதே இதில் முக்கிய நடவடிக்கை என்று முன்னாள் முதல்வர், தேசிய மாநாட்டு கட்சியின் ஒமர் அப்துல்லா கூறினார். ஆரம்பத்திலேயே எல்லைகளை தீர்மானிப்பது குறித்து பிரதமர் பேசினார். அதாவது சட்டமன்றத் தேர்தல்களைத் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று அர்த்தம், ”என்று அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்.
ஜம்மு காஷ்மீர் தலைவர்கள் பல கோரிக்கைகளை வைத்தாலும், அரசியலமைப்பின் பிரிவு 370 மற்றும் பிரிவு 35 ஏ ஆகியவற்றிற்கு மறைமுக குறிப்புகள் மட்டுமே இருந்தன. உண்மையில், முன்னாள் பி.டி.பி. தலைவர் முசாஃபர் பெய்க், உச்ச நீதிமன்றம் ஏற்கனவே ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019-ன் செல்லுபடிக்கு சவால்விடுத்த மனுக்களை விசாரித்து வருகிறது. இந்நிலையில் 370வது பிரிவை மீட்டெடுக்கக் கோருவது நீதிமன்ற அவமதிப்புக்கு ஒப்பானது என்று சுட்டிக்காட்டினார். ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட மூத்த தலைவர் ஒருவர், காஷ்மீர் மக்களிடம் பிரிவு 370 மீண்டும் நடைமுறைக்கு வரும் என்று நம்பிக்கை அளிப்பது அரசியல் முரணாக அமையும். பாஜக நம்மிடம் இருந்து அதை எடுத்து சென்றது. மீண்டும் அதனை தருவார்கள் என்று நம்ப முடியாது என்றார். ஆனால், உச்ச நீதிமன்றத்தில் அதனை எதிர்த்து போரிடுவோம். கடிகார முட்களை பின்னோக்கி நகர்த்தும் என்று அது கூறியுள்ளது என்றார்.
கூட்டத்தில் எந்த அரசியல் தலைவர்களும் அதிகபட்ச நிலைப்பாடுகளை எடுக்கவில்லை; குறுக்கு பேச்சு இல்லை. அவர்களின் கருத்துகளை எல்லாம் பிரதமர் அமைதியாக கேட்டார் என்று பலரும் கூறுகின்றனர். நாங்கள் டிலிமிட்டேஷன், தேர்தல்கள் மற்றும் மாநிலத்திற்கான காலக்கெடுவுடன் திரும்பி வந்தோமா என்றால் இல்லை. ஆனால் இது ஒரு நல்ல துவக்கம் என்று அவர் கூறினார்.
தொகுதி எல்லை நிர்ணயம் தொடர்பான (Delimitation) பயிற்சியில் ஒமர் ஒரு சிவப்புக் கொடியை உயர்த்தினார் – நாடு முழுவதும் இருக்க வேண்டும் என்று கருதப்படும் போது ஜம்மு காஷ்மீர் மட்டும் ஏன் தனித்துவிடப்பட வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். டிலிமிட்டேஷன் கமிஷனில் அவரது கட்சியின் மூன்று ‘அசோசியேட் உறுப்பினர்கள்’ பிப்ரவரி 18 கூட்டத்தைத் தவிர்த்தனர். “டாக்டர் சாஹிப் (ஃபாரூக் அப்துல்லா) அவர்களுக்கு உரிய நேரத்தில் முடிவெடுக்க அதிகாரம் அளிக்கும் கட்சியின் நிலைப்பாடு உள்ளது,” என்று அவர் கூறினார். ஆணைக்குழு விரைவில் அனைத்து தரப்பினரையும் அணுகி அவர்களின் கருத்துக்களை அறிந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் கூறினார்.
மக்கள் மாநாட்டின் தலைவர் சஜாத் லோன், நம்பிக்கையுடன் கூட்டத்தில் இருந்து வெளியேறினேன் என்று கூறினார். இது நல்லிணக்கத்தின் ஒரு புதிய கட்டத்தைத் தொடங்கக்கூடும். இது கடினமானது நாம் அனைவரும் எங்கள் வார்த்தைகளைச் சரிபார்த்து பேச்சுவார்த்தையை எளிமையாக்க வேண்டும் என்று அவர் கூறினார். இது உள்நாட்டு மற்றும் சர்வதேச பார்வையாளர்களுக்கு சரியான சமிக்ஞைகளை அனுப்பியிருக்கலாம். ஆனால் காஷ்மீரில் உள்ள கட்சிகள் நம்பிக்கையுடனும் சிலர் நிம்மதியுடனும் திரும்பினர். அவர்களை மத்திய அரசு கையாள வேண்டும்.
அடுத்து என்ன நடக்கும்? இது வெறும் புகைப்படம் பிடித்த நிகழ்வாக இருக்குமா அல்லது ஒரு செயல்முறையின் தொடக்கமா என்பதை மத்திய அரசின் செயல்பாடு தெரிவிக்கும். சில தலைவர்கள், ஒருவேளை, இன்னும் கட்டமைக்கப்பட்ட செயல்முறை இன்று அடையப்பட்டதை உருவாக்க உதவும் என்று பரிந்துரைத்துள்ளனர். டிலிமிட்டேஷன் செயல்பாட்டில் அவர்கள் எவ்வாறு பங்கேற்கிறார்கள் என்பது முதல் சோதனையாக இருக்கலாம்.
source https://tamil.indianexpress.com/explained/srinagar-delhi-ice-cracks-in-a-bit-of-warmth-but-political-thaw-is-long-haul-317160/