வெள்ளி, 18 ஜூன், 2021

புதிய மாணவர்களுக்கு ஊக்கம் தரும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்

 

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த ஓராண்டுக்கு மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் தடை செய்யப்பட்டுள்ளன. இடையில் சில மாதங்கள் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்கள் அவ்வளவாக வகுப்பிற்கு வரவில்லை. இதில் பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் மட்டுமே நேரடி வகுப்பிற்கு வந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால சில வாரங்கள் அதையும் தடை செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதன் காரணமாக 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் முந்தைய ஆண்டு எடுத்த மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்றின் 3-வது அலை வேகமாக பரவிய நிலையில்,இம்மாத தொடக்கத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இந்த ஊரடங்கு தற்போது 3-வது முறையாக வரும் 21-ந் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில், 3-வது ஊரடங்கின் தளர்வுகளில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தனியார் மற்றும் அரசு பள்ளி கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஸ்ரீவில்லிப்புத்தூரில் அரசுப்பள்ளியில் புதிதாக சேரும் மாணவர்களுக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தனது சொந்த செலவில் ரூ 1000 பரிசு வழங்கி ஊக்குவித்து வருகிறார்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள படிகாசுவைத்தான் பட்டியில் உள்ள ஊராட்சிஒன்றி தொடக்கப்பள்ளியில், அரசு அறிவித்ததை தொடர்ந்து மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் ஜெயக்குமார் என்பவர் பள்ளியில் புதிதாக சேரும்மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் ரூ 1000 சிறப்பு பரிசு வழங்கி வருகிறார். அரசுப்பளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த முயற்சியில் இறங்கியுள்ளார்.

இந்நிலையில்,  கடந்த ஆண்டு புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு ஆண்ட்ரய்டு செல்போன் வாங்கி கொடுத்துள்ளார். தலைமை ஆசிரியரின் இந்த தாராள குணம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அனைவரும் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-near-srivilliputhur-govt-school-hm-give-special-gift-for-new-student-314807/